தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்து

இந்தியஅரசு தானே முன்வந்து  தமிழீத்திலும், உலக நாடுகளிலும் பரவி வாழும் தமிழீத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடைபெறவிருக்கும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தஞ்சை


தஞ்சையில் 20.02.2014 அன்று மாலை 05.00 மணியளவில்தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இவ்ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கப்பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையேற்றார்.

 தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர்பெ.மணியரசன் , விடுதலை தமிழ் புலிகட்சியின் விவசாய பிரிவு செயலாளர்தோழர் தங்கராசு, நாம் தமிழர் கட்சிதோழர் சதா முத்துகிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சி தோழர்கலந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைதஞ்சவூர் மாவட்டத் தலைவர் எம். கனேசன்உள்ளிட்ட தோழர்கள் விளக்க உரையாற்றினர்.

..டி.யூ.சி. மாவட்ட செயலாளர்மதிவாணன் நன்றி உரையாற்றினார் .

இவ்ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாககலந்துக் கொண்டனர்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தஞ்சை நகர செயலாளர் தோழர்இராசு.முனியாண்டி உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

மதுரை


மதுரைஆறுமுச்சந்தி பேச்சியம்மன் படித்துரையில் 20.02.2014 வியாழன் மாலை 6.00 மணிக்கு  நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கம்தோழர் எம்.ஆர் மாணிக்கம்தலைமையேற்றார்.

தமிழ்த்தேசிய இயக்கம் பொதுச் செயலாளர்தோழர் .பரந்தாமன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் மதுரை மாநாகரச்செயலாளர் தோழர் ரெ. இராசு, மதச்சார்பட்ற ஜனதா தளம் . ஜான்மோசஸ், நாம் தமிழர் கட்சிபொறி. வெற்றிக்குமரன், தமிழ்த் தேசக் குடியரசுஇயக்கம் கதிர்நிலவன், தமிழ் தமிழர் இயக்கம்பரிதி, எஸ்.டி.பி.., சுப்பிரமணியன், தந்தைபெரியார் திரவிடக் கழகம் தமிழ்பித்தன் உள்ளிட்டஇயக்கம் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் . ஆனந்தன்எழுச்சி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தைதமிழ்த் தேசிய இயக்கம் தோழர்வே..கனேசன் நன்றிஉரையாற்றினார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Post a Comment

0 Comments