ஒருவர்உண்மையான தமிழ்த் தேசியரா, குழப்பமில்லாத தமிழ்த் தேசியரா என்பதைக்கண்டறிவதற் கான சிறந்த உரைகல்அவர் அயலார் ஆக்கிரமிப்பு பற்றிஎன்ன கருத்து வைத்துள்ளார் என்பதாகும்.
தமிழ்த்தேசம் தமிழர்களின் தாயகம். தமிழர்கள் மிகப்பெரும்பான்மையாகக் காலம் காலமாக வாழ்ந்துவருவதால் தான் இது தமிழ்த்தேசமாக நீடிக்கிறது. அயல் இனத்தார் பெரும்பான்மைஆகிவிட்டாலோ அல்லது தமிழர்களின் எண்ணிக்கைக்குசமமாக அயலார் வந்துவிட்டாலோ இதுதமிழ்த் தேசமாக நீடிக்காது.
இப்போதுஉலகில் பெரும்பாலும் அந்தந்தத் தேசிய இனத்திற்கு அந்தந்தத்தாயகம் என்ற வரையறை இருக்கிறது. தேச அரசு உருவாக்கத்திற்கானப் போராட்டம்(Nation State Formation) 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்தது. இன்று கிட்டத்தட்ட இருநூறுநாடுகள் இருக்கின்றன. தேச அரசு உருவாக்கப்போராட்டம் ஐரோப்பாவிலேயே இன்னும் முற்றுப் பெறவில்லை. பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போக அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும்போராடிக் கொண்டிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் தனிநாடு குறித்துக் கருத்துவாக்கெடுப்பு நடத்த பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து பிரிந்து போக கட்டலோனா போராடிக்கொண்டிருக்கிறது. கட்டலோனாவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்போவதாகக் அம் “மாநில” அரசு, தன் விருப்பப்படி அறிவித்துள்ளது. அதாவது ஸ்பெயின் மற்றும்ஐ.நா. பார்வையாளர்இன்றி அது தானே கருத்துவாக்கெடுப்பு நடத்தப் போகிறது.
தேசஅரசின் வரைவிலக்கணம் என்ன? ஒரு பொதுமொழி பேசும் மக்கள் காலம்காலமாக வாழ்ந்து வரும் தாயகப் பகுதிதான் தேசம். அது தனக்கானஅரசுடன் விளங்குவது தேச அரசு ஆகும். பழங்குடிகள் அதிகமாக வாழுமிடங்களில் பழங்குடிகளின்மூல இனத்தின் அடையாளத்தைக் கொண்டு தேசம் அமைகிறது. (எ.டு.) ஜார்கண்ட், நாகாலாந்துபோன்றவை.
ஐரோப்பாவில்உருவான தேச அரசுகள்- இறையாண்மைக்கோட்பாட்டை வலுப்படுத்தின; வளர்த்தன. குறிப்பிட்ட தேசத்தில் எவ்வகையான ஆட்சி இருப்பது, சமூகஅமைப்பு இருப்பது என்பதை அந்தந்த தேசமக்களே முடிவு செய்வர். அடுத்ததேசத்தார் அதில் தலையிடக் கூடாது. ஒரு தேசத்தை இன்னொரு தேசம்ஆக்கிரமிக்கக் கூடாது. குடியுரிமை வழங்கும்அதிகாரம் அந்த தேசத்திற்கு மட்டுமேஉண்டு. பிற தேசத்தவர் அந்ததேசத்தின் அனுமதி இல்லாமல் அதற்குள்நுழையக் கூடாது. குடியேறக் கூடாது. இதற்காகக் கடவுச்சீட்டு (பாஸ் போர்ட்டு) நுழைவுச்சீட்டு (விசா) ஆகியவை உருவாக்கப்பட்டன.
இப்பொழுதுஅரபு நாடுகளிலும், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் பலர் வேலைக்குப் போகிறார்கள். அவர்களில் சிலர் அந்நாடுகளின் குடியுரிமைபெறுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது? அந்தநாடுகளின் உள்நாட்டு மக்களால் நிறைவு செய்ய முடியாதபணிகளில் வெளி நாடுகளிலிருந்து தங்களுக்குத்தேவைப்படும் திறமை உள்ளவர்களைத் தேர்வுசெய்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.
கடவுச்சீட்டு- நுழைவுச் சீட்டு அடிப்படையில் இத்தேர்வுகள்நடக்கின்றன. பிழைப்புத் தேடும் பிறநாட்டவர்க்கு வேலைகொடுக்க வேண்டும் என்ற கருணையினால் எந்தநாடும் அயல் நாட்டார்க்கு வேலைகொடுப்பதில்லை. அந்நாட்டின் தேவையினால் வேலை கொடுக்கிறார்கள். தேவைமுடிந்து விட்டால், பிற நாட்டார்க்கு வேலைகொடுக்க மாட்டார்கள். திருப்பி அனுப்பி விடுவார்கள்.
கடந்தசில ஆண்டுகளாக மேலை நாடுகளில் பொருளாதாரமந்த நிலை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டிலிருந்துவந்து வேலை பார்ப்பவர்களைப் படிப்படியாகவெளியேற்றும் நிலையில் அல்லது வெளி நாட்டவரைஅனுமதிப்பதைக் குறைத்துக் கொள்ளும் நிலையில் அவை இருக்கின்றன, அரபுநாடுகளில், வெளி நாட்டவர் களைத்திருப்பி அனுப்புகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைக்குவெளிநாட்டவரை அழைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகவரம்பு கட்டிவிட்டார்கள்.
இறையாண்மைஉள்ள நாடுகள், அயல் இனத்தாரை அனுமதிப்பதற்கு இத்தனை கட்டுப் பாடுகளைவைத்துள்ளன. அளந்து அனுமதிக்கிறார்கள், அவ்வாறேவெளியேற்றுகிறார்கள். ஏன்? ஏனெனில் அந்தநாடு ஒரு குறிப் பிட்டஇனமக்களின் தாயகம். முழுக்க முழுக்கஅந்த இனத் தார்க்கு மட்டுமேஉரியது. அயல் இனத்தார் மக்கள்தொகை பெருகி, அந்த நாடுபல இனங்களின் தாயகமாக மாறிவிடக் கூடாதுஎன்ற முன்னெச்சரிக்கையே இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அடிப்படைக்காரணம். பிறநாடுகளில் மக்கள் கொடிய வறுமையில்வாடுகிறார்கள்- வேலையில்லா திண்டாட்டத்தில் அல்லலுறுகிறார்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க, அவர்கள்வறு மையைப் போக்க - நம்நாட்டில் அழைத்துக் கொள்வோம் என்று எந்த நாடும்வெளியாரை அனும திப்பதில்லை.
பிறநாடுகளில் நிலவும் வறுமை மற்றும்வேலையில்லாத் திண் டாட்டத்தின் மீதுகருணை ஏற்பட்டால் அந்நாட்டிற்கு நிதி உதவி, பொருளுதவிசெய்யும் நாடுகள் இருக்கின்றன. அதற்காகஅந்நாட்டு மக்களை வரைமுறை யின்றித்தங்கள் நாட்டுக்குள் நுழைய விடமாட்டார்கள். சிலவல்லரசு நாடுகள் இவ்வாறான உதவிகள்செய்யும் வழியாக அந் நாடுகளில்தங்கள் பொருளாதார - அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதும் உண்டு. எந்த வகையிலும்பிற நாட்டினரை வகை தொகையின்றித் தங்கள்நாட் டிற்குள் திமுதிமு வென அனுமதிப் பதில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசியசோவியத் ஒன்றியம், சீனம் போன்ற நாடுகள்- உண்மையான கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் ஆட்சியில் இருந்த போதும் வெளியார்நுழைவு குறித்தக் கட்டுப்பாடுகள் இருந்தன. இப் போது கியூபா, வியட்நாம், வட கொரியா போன்றகம்யூனிஸ்ட்டு நாடுகளில் வெளியார் நுழைவுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
வெளியார்நுழைவு குறித்து உலக அளவில் நாடுகள்கடை பிடிக்கும் கட்டுப்பாடுகள் தமிழ்த் தேசத்திற்குத் தேவையாஇல்லையா? தேவை என்கிறது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி. தமிழ்நாட்டிற்குள் அயல்இனத்தார் நுழைந்து வேலைபார்ப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் தேவைஇல்லை என்கிறார்கள் தோழர் பொழிலன், பாவலர்தமிழேந்தி போன்றவர்கள்.
தமிழ்நாடுஏழு கோடி மக்கள் தொகைகொண்டது. உலகில் முதலில் தோன்றியஇனத்திற்கும் மொழிக்கும் தாயகம் தமிழ்நாடு தான். தனித்த வரலாறும் பண் பாடும் கொண்டுபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலையானஇனச்சமூகமாக விளங்குகிறது தமிழ்ச் சமூகம்.
எனவே, தனிநாடாக விளங்குவதற்கு, எந்த தேசத்தையும்விடக் கூடுதல்தகுதி பெற்றது தமிழ்நாடு என்கிறதுதமிழ்த் தேசப் பொது வுடைமைக்கட்சி.
தனிநாடாகஆனபின் உலக நாடுகளின் ஏற்பிசைவுடன்சட்டப் படியான இறையாண்மை (De Jure Sovereignty) தமிழ்நாட்டிற்குக்கிடைக்கும். அப்போது மலையாளிகள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயலாரைத் தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பதற்குகட வுச் சீட்டு - நுழைவுச்சீட்டு வரை முறைகளைத் தமிழ்நாடுகடை பிடிக்கும். அதற்கு அந்த சட்டப்படி யான இறையாண்மையானது அதிகாரம் தரும். ஆனால் அதற்குமுன், தமிழக விடுதலைக்குப் போராடுவோர், தங்களால் கடைபிடிக்க இயன்றவரையில் நடைமுறைஅடிப்படையில் ஓர் இறையாண்மையை (De Facto Sovereignty) கடைபிடிப்பர். நடைமுறை இறையாண்மை என்பது உலகத்தில் கடைபிடிக்கப்படுகின்ற ஒரு கோட்பாடு தான்.
இந்தியாவுக்குள்உள்ள அயல் இனத்தாராக இருந்தாலும்இந்தி யாவுக்கு வெளியே உள்ள அயல்இனத்தாராக இருந்தாலும் தமி ழகம் இந்தநடைமுறை இறையாண் மையைக் கடைபிடிக்கவேண்டும் என்கிறது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. தமிழ்த் தேசவிடுத லையைத் தாங்களும் கோருவதாகக்கூறிக் கொள்ளும் பொழிலனும் தமிழேந்தியும், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள், ஒரியர்கள், வங்காளிகள் இன்னும் பிற அயல்இனத்தார் அனைவரும் எந்தக் கட்டுத் திட்டமும்வரம்பும் இல்லாமல் திமுதிமுவென்று தமிழ்நாட்டிற்குள் புகுந்து தமிழ் மக்களுக்குரிய வேலைவாய்ப்பு களை கைப்பற்றிக் கொள்வதை, இங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதைவரவேற்கிறார்கள். அவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர்அட்டை அனைத்தும் வழங்க வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குக் குடும்ப அட்டையும் வாக்காளர்அட்டையும் வழங்கினால் அவர்கள் நிரந்தரமான தமிழகக்குடிமக்கள் ஆகிவிடு வார்கள். அவ்வாறுஅயல் இனத் தார் தொகைபெருகினால் தமிழகம் தமிழர் தாயகமாகநீடிக்காது. கலப்பினத் தாயகமாக மாறிவிடும் என்றுகவலைப்படுகிறது, எச்சரிக் கிறது தமிழ்த் தேசப்பொதுவுடை மைக் கட்சி.
இதற்காகத்த.தே.பொ.க.விற்கு இனவெறிக்கட்சி என்று பட்டம் சூட்டுகின்றனர்பொழிலனும், தமிழேந்தியும்! தமிழேந்தி இன்னும் கீழிறங்கி, த.தே.பொ.க.வை அரம்பத் தனக்கட்சி என்கிறார். (தென் மொழி - பிப்ரவரி2014, உழைக்கும் மக்கள் தமிழ்கம் ஏப்ரல்- மே 2014)
உலகத்தில்தேச விடுதலைக் காகப் போராடும் எந்தஅமைப்பா வது, தங்கள் தேசத்தில்அயல் இனத்துத் தொழிலாளிகள் வரை முறையின்றிக் குடியேறிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறார்களா? பொழிலனுக்கும்தமிழேந்திக்கும் பிடித்தமான சொற்கோவையுடன் கேட்போம்; “சிங்களப் பாட்டாளிகளைத்’’ தமிழீழத்தில் குடியேற அனுமதித்தார்களா விடுதலைப்புலிகள்? “சிங்களப் பாட்டாளி களைத்” தமிழீழத்தில் குடியேறவிடுதலைப்புலிகள் அனுமதிக் காததைக் கண்டித்துப் பொழிலன்திறனாய்வு செய்ததுண்டா? இல்லை! சிங்களப் பாட்டாளிகளைத் தமிழீத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது த.தே.பொ.கநிலைபாடு.
“.... சிக்கல்களை ஏற்படுத்தும்பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின்சூழ்ச்சிகளை இவ்வகையில் விளங்கிக் கொள் ளாமல், தமிழகத்தில்உள்ள பிற மொழியினரை வகுப்பு(வர்க்க) அளவில் வேறு பிரித்துஅடையா ளப்படுத்தி மறுக்க வேண்டிய உணர்வின்றிச்சகட்டு மேனிக்குப் பிற மொழியினரையெல்லாம் வந்தேறிகள்என்பதும், 1956- க்குப் பின்னர் வந்தஅனைவரையும் வெளியேற்றுவோம் என்பதும், அவர்களுக்கெல்லாம் பங்கீட்டு (ரேசன்) அட்டை தரக்கூடாது, இந்திய அடையாள (ஆதார்) அட்டை தரக் கூடாது என்பதும்என்ன வகையில் தமிழ்த் தேசஅரசியலாக இருக்க முடியும்?’’ என்றுகேட்கிறார் பொழிலன். (தென்மொழி - பிப்ரவரி 2014)
என்னவகையிலான தமிழ்த் தேச அரசியல்என்றால் உண்மை யான தமிழ்த்தேச அரசியல் இதுதான்; போலியானதமிழ்த் தேச அரசியல் த.தே.பொ.க.விடம் இல்லை என்பதுதான் நமது விடை! பிறமொழியினரை “சகட்டு மேனிக்கு வந்தேறிகள்’’என்று த.தே.பொ.க. சொல்வதுபொழிலனுக்கு நிரம்பவும் வலியைஉண்டாக்கியிருக்கிறது போலும்!
கர்நாடகத்தில்அப்பாவித் தமிழர்களைக் கன்னடர்கள் தாக்கிய போதும், கேரளத்தில்அப்பாவித் தமிழர்களை மலையா ளிகள் தாக்கியபோதும் இவ்வா றான “வலி” பொழிலனுக்கு ஏற்பட் டதாகத் தெரியவில்லையே!
அவர்கள்எல்லாம் வந்தேறிகள் அல்லாமல் தமிழ்த் தேசக் குடிமக்கள் என்கிறாரா பொழிலன்?
“அசாமில்மார்வாடிகளை விரட்டும் போதும், காசுமீரத்தில் நுழைந்திருந்த“பண்டிட்டு’’களை யும் சீக்கியர்களையும்விரட்டிட முழக்கங்கள் இடும் போதும் கூட“இந்திய நாய்களே வெளியேறுங் கள்’’, “இந்தியாவே வெளியேறு” என்று தான் முழக்கமிட்டார்களேயன்றி குறிப்பிட்ட பிற மொழித் தேசங்களைஅவர்கள் பகையாக்கிக் கொள்ளவில்லை என்பதை அறிய வேண்டும்,’’ என்கிறார் பொழிலன். (மேலது)
“இந்தியநாய்களே’’, என்பது நாகரிமான சொல்லாடலா? “நாய்’’ என்று அழைக்காது நாகரிகமாகவே, அயலார், வெளியார் என்று த.தே.பொ.க. அழைத்துவருகிறது. “வந்தேறிகள்’’ என்ற சொல்லாடலைப் பெரும்பாலும்மார்வாடி, குசராத்தி சேட்டுகளைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டை ஆக்கிரமிக்கும்எந்த அயல் இனத்தாரையும் அவர்கள்முதலாளிகளாக இருந்தாலும் தொழிலாளிகளாக இருந்தாலும் வந்தேறிகள் என்று சொல்லுவது குற்றமில்லை. மலையாளிகள், இந்திக்காரர்கள், வங்காளிகள் என்று இனப்பெயர் சுட்டாமல்“இந்தியர்களே’’என்று கூறுங்கள் என்கிறார்பொழிலன். அதைச் சொல்ல வந்தவர்தான்‘இந்திய நாய்களே வெளியேறுங்கள்’ என்றமேற்கோளை கையாண்டார். ‘இந்தியர்’ என்று யாருமே இல்லைஎன்பதுதான் த.தே.பொ.க.வின் நிலைபாடு.
“தமிழ்த்தேச உருவாக்கத்தை, அதன் எழுச்சியைச் சிதைக்கும்நோக்கத்தில் இயங்கும் இந்திய - பன் னாட்டு நிறுவனங்களைஎதிர்க்கா மல் எய்யும் அம்புகளைநொந்து கொள்வது எதிரியை எதிர்ப்பதாகுமா?’’ என்று பொழிலன் கேட்கிறார்.
இந்திய- பன்னாட்டு நிறுவனங் களை எதிர்த்துப் பொழிலன்போராட்டம் நடத்திக் கொண்டி ருப்பது போலவும், அதை மடை மாற்றி, த.தே.பொ.க. அயல் இனத் துப் பாட்டாளிகளைஎதிர்க்கச் சொல்வது போலவும் இருக்கிறதுஅவரது திறனாய்வு! இந்திய - பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க் கப் பொழிலனிடம்உள்ள வேலைத் திட்டம் என்ன? அதன் அடிப்படையில் அவர் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் என்ன!
திறனாய்வுஎன்ற பெயரில் தமிழ்த் தேசியத்திற்குஎதிரான சீர்குலைவுக் கருத்துகளை எழுதிக் கொண்டிருப்பதைத் தவிரஉருப்படியான வேலைத் திட்டம் எதையும்பொழிலன் முன்வைக்க வில்லை.
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் தமிழ்நாட்டில்குவிக்கப் பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களை, இந்திய நாட்டு நிறுவனங்களைத்தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று த.தே.பொ.க. தொடர்ந்துகுரல் கொடுத்து வருகிறது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் நிறுவனங்கள், மலையாளிகளின் பெருநிறுவனங் கள் ஆகியவற்றை வெளியேற்றக்கோரி அவற்றின் முன் மறியல் போராட்டங்கள்நடத்தி நூற்றுக் கணக்கான த.தே.பொ.க. தோழர்கள்பல தடவை சிறைப்பட்டுள்ளார்கள், தளைப்பட்டுள்ளார்கள்.
“எதிரியைஎதிர்க்காமல் அவர் கள் எய்யும்அம்புகளை நொந்து கொள்ளலாமா’’ என்றுகேட்கிறார். எதிரிகளையும் எதிர்க்கிறோம்- தமிழர் மீது பாயும்அம்புகளையும் தடுக்கிறோம்.
எதிரிஅம்பு எய்தால் - அந்த அம்புகளைத் தடுத்துமுறியடிப்பது தான் போர் முறை; அம்புகளை விட்டு விடுங்கள் எதிரியைமட்டும் தாக்குங்கள் என்றால் அது என்னபோர் முறை!
தமிழினத்திற்குஆதரவு போல் காட்டிக் கொண்டு, அம்பை விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறுவதுஎதிரியின் வெற்றிக்கு வழி தேடும் உத்தியல்லவா? அதைத் தான் பொழிலன் செய்கிறார். தமிழ்த் தேசம் கலப்பினங்களின் தாயகமாகமாறுவது பற்றிய கவலை அவருக்குஎள்ளளவும் இல்லை.
இந்தியா, இந்திய அரசு ஆகிய இரண்டைப்பற்றியும் தவறாக வரையறுக்கிறார் பொழிலன்.
“பொருளியல்சுரண்டலுக்காக அரசதிகாரத்தை நிறுவுகிற இந்தியா, தன் அரசதிகாரத்தின் வழிபல்வேறு மொழித் தேசங்களின் மொழியை, பண்பாட்டை, வரலாற்றை பிற அனைத்து உரிமைகளையும் படிப்படியாக நசுக்குவதும் அழிப்பதுமாக இருக்கிறது. இந்தி யப் பண்பாடு, இந்திய வரலாறு என ஆரியப்பார்ப்பனியப் பண்பாட்டையும் அதன் வரலாற்றையுமே காக்கவும், வளர்க்கவும் பரப்பவும் செய்கிறது’’ என்கிறார் பொழிலன். (மேலது)
இந்தியஅரசு பற்றிய வரைய றுப்பைஎவ்வளவு தவறாகச் செய் துள்ளார்பொழிலன்! அவர் கருத்துப்படி இந்தியஅரசு, இந்தி மொழி உள்ளிட்டஇந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும்நசுக்குகிறது! நசுக்கப்படும் பட்டிய லில் இந்தியையும்அவர் சேர்க்கி றார். அவ்வாறு சேர்க்கவில்லைஎனில், இந்தியை இந்திய அரசுஇந்தி அல்லாத எல்லாத் தேசியஇனங்களின் மீதும் திணிக்கிறது என்றஉண்மையை ஏன் இதில் கூறவில்லை?
இந்திஆதிக்கத்தைச் சுட்டிக் காட்ட மறுப்பது ஏன்? இதில் என்ன கமுக்கம் இருக்கிறது?
இந்தியாவில்உள்ள தேசிய ஒடுக்குமுறையின் தன்மைஎன்ன? எந்த ஒரு தேசியஇனமும் மற்ற தேசிய இனங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது சி.பி.எம்., சி.பி.ஐ., மா.லெ.கட்சிகளின் வரையறுப்பு. அந்த வரையறுப்பில் தான்பொழிலன் இருக்கிறார்.
இந்திதேசிய இனம் ஒரு மொசைக்தேசிய இனமாக உருவாகியுள்ளது. இந்திஎன்பது சமற்கிருதத்தின் குழந்தைவடிவமாக ஆரியப் பார்ப்பனர்களாலும், வடநாட்டுப் பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள், இந்துத்துவா ஆற்றல்கள், மார்வாடி, குசராத்தி சேட்டுகள் போன்றவர்களாலும் பார்க்கப்படுகிறது. இந்தி தனிப் பட்டஎந்த இனத்திற்கும் தாய் மொழியாக இல்லாவிட்டாலும்உ.பி.,, பீகார், ம.பி., ,உத்தரகாண்ட்உள்ளிட்ட பல மாநிலங்களிக்கு இந்திதான் கடைதெருப் பேச்சு மொழி, - கல்விமொழி, அலுவல் மொழி! இவ்வாறாகஒரு மொசைத் தேசிய இனமாகஇந்தி தேசிய இனம் உருவாகியிருக்கிறது. இந்தி பேசுவோர் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தி பேசுவோர் இந்துத்துவாவுக்கு நெருக்கமாக உள்ளனர். இந்தி மண்டலத்தை பசுமாட்டு வட்டாரம் (புனிதப் பசு - வழிபாடு) என்று அழைப்பது உண்டு.
இப்பெரியஇந்தி பேசும் தேசிய இனத்தினரை, இந்தியப் பெரு முதலாளிகள் அரவணைத்துக்கொள்கின்றனர். அவர்களின் மொழியை, இந்துத்துவாவை ஆதரிப்பதின் வழியாக அவர்களை இந்தியப்பெருமுதலாளிகள் அரவணைத்துக் கொள்கின்றனர்.
இந்தியஅரசு என்பது பெரு முதலாளிகள்தலைமையில் இயங் கும் முதலாளிய- ஆரியப் பார்ப்ப னிய - இந்திதேசிய இன ஆதிக்க அரசு. இது ஏகாதிபத்திய அரசாக வளர்ச்சியுற்று வலுப்பெற்றது. இந்திய அரசைப் பற்றிய த.தே. பொ.க. வரையறுப்பு இது தான்! (த.தே.பொ.க. கொள்கை அறிக்கை நான்காம் பதிப்புபக்கம் - 13)
இந்தியாவில்இந்தி மொழி ஆதிக்கம் இருக்கிறது. இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து1938 முதல் தமிழர்கள் போராடி வருகிறார்கள். 1965 இல்நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தில் தமிழ கத்தில் 300 பேர்க்குமேற்பட்டோர் ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவம்வரவ ழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடந்தது.
தமிழ்நாட்டில்உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்வேலைக் கான தேர்வுகள் இந்திஅல்லது ஆங்கிலத்தில் நடக்கின்றன. இந்தி மொழி பேசும்வடநாட்டு தலித், பழங்குடி மற்றும்பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கள் மொழியில் தேர்வெழுதிக்கூடுதல் மதிப்பெண்பெற்று தலித், பழங்குடி மற்றும்பிற்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டைஅபகரித்துக் கொள்கிறார்கள். மொழி மற்றும் இனஅடிப்படையில் இந்தி மற்றும் இந்திதேசிய இனத்தின் ஆதிக்கமும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் இந்தியாவில்இருக்கிறது.
எல்லாத்தேசிய இனங்களையும் இந்திய அரசு ஒடுக்குகிறதுஎன்பது முழு உண்மையன்று. இந்தித்தேசிய இனத்தின் ஒடுக்கு முறையையும் சுரண்டலையும்மறைப்பதற்காகச் சொல்லப்படும் வாதம் ஆகும்.
“தமிழ்த்தேச விடுதலைப் புரட்சிக்கு, இந்தியாவில் ஒடுக்கப் பட்டுள்ள மற்ற இனங்களின் ஆதரவுதேவை அல்லவா, அவர்களை “வெளியாரைவெளியேற்ற வேண்டும்’’ என்று பேசினால் எப்படிஆதரிப்பார்கள்’’ என்று கேட்கிறார் பொழிலன். அந்த ஒடுக் கப்பட்ட இனங்கள்நடத்தும் விடுதலைப் புரட்சிக்குத் தமிழர்கள் ஆதரவும் தேவை தானே! விடுத லைக்குப் போராடுவோர் ஒருவர் மற்றவரை ஆதரிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அப்போராட்டம் வரும்போது அது நடக்கும். பொழிலன்கூறுவது போல் அயல் இனத்தவர்கள்தங்கு தடையில்லா மல் தமிழ்நாட்டில் நிரம்பிவிட்டால், அதன்பிறகு தமிழகத்தில் விடுதலைப் புரட்சி எழ வாய்ப்பேஇருக்காது. அண்டை இனங்கள் விடுதலைப்புரட்சி செய்து, தமிழ்நாட்டைப் பங்குபோட்டுக் கொள்ளும். இது தான் பொழிலன்விருப்பமா?
பிறமாநிலங்களில் தமிழர்கள் பிழைக்கப் போயிருக்கிறார்களே, அவர்கள் கதி என்னாவதுஎன்று கேட்கிறார் தமிழேந்தி. பிற மாநிலங்களின் தேவைஅடிப் படையில் உழைப்பாளிகளாகத் தமிழர்கள்போயிருக்கிறார்கள். தொழில், வணிகம், மொழிஆகிய வற்றில் அத்தமிழர்கள் அங்குஆதிக்க ஆற்றல்களாக இல்லை. ஒரு வேளைஅங்குள்ள தமிழர்களை அத்தேசிய இனங்கள் வெளியேற் றினால்தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அயல் இனத் தார்நடத்திய தொழில், வணிகம், வேலைஆகியவற்றை, தாய்த் தமிழகம் திரும்பும்தமிழர்களுக்கு வழங்கலாம். அவ்வாறு வழங்கி னால்வெளி மாநிலங்களில் அல்ல லுற்றதை விடசெழிப்பாகவே தாய் மண்ணில் தமிழர்கள்வாழ்வார்கள்.
தமிழ்நாட்டில்தமிழ்த் தேசிய இனம் எழுச்சிபெற்று நின்றால் அயல் மாநிலங்களில் தமிழர்கள்மீது கை வைக்க அஞ்சுவார்கள்என்பதே உண்மை. பிற தேசங்களில்வாழும் தமிழர்களின் மதிப்பு கூடும்.
வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவது மாந்த நேயமல்ல என்றுதமிழேந்தி பேசுகிறார். ( உழைக்கும் மக்கள் தமிழகம் – ஏப்ரல் – மே – 2014 ) வீடில்லாமல் தெருவில் வசிக்கும் ஏழைகளைத் தங்கள் வீட்டில் ஒருபகுதியைப் பகிர்ந்து கொள்ளச் சொல்வாரா தமிழேந்தி? தமிழ்த் தேசம் தன் இனத்தின்வீடு என்ற உணர்வில்லாதவர்கள்தாம் இவ்வாறான “பகட்டு மாந்த நேயம்” பேசுவர்.
நாம்எந்த இனத்தாரையும் தாக்க வில்லை; துன்புறுத்தவில்லை. எந்த அயலார் சொத்தையும் அபகரிக்கவில்லை. எங்கள் மண்ணில் எங்களுக்கேஇட மில்லை; இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் சாலை ஓரங்களில், சாக்கடைஓரங்களில், மரத்தடிகளில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் எங்கள்மக்களுக்கே வேலை இல்லை; தமிழகவேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டுப் பதிவுசெய்துள்ளோர் 80 இலட்சம் பேர். எனவே, உங்களுக்கு வழங்க எங்க ளிடம்உபரியாக நிலம் இல்லை, வளம்இல்லை. நீங்கள் திரும்பிப் போய்விடுங்கள் என்று கூறுவது குற்றமா? உங்கள் தாயகத்தில் உங்கள் உரிமைக்குப் போராடுங்கள். உங்கள் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றுசொல்வது குற்றமா?
தமிழகத்திற்குமிகக் குறைவான நிலப்பரப்பே உள்ளது. 70,000 ச.கி.மீ. வரைதமிழர் மண்ணை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அபகரித்துக்கொண்டன.
தமிழகமக்கள் தொகை 7,21,00,000 நிலப்பரப்பு 1,30,058 ச.கி.மீ. கர்நாடக மக்கள் தொகை 6,11,30,704 பரப்பளவு1,91,791 ச,கி,மீ., ஆந்திரப்பிரதேசம்மக்கள் தொகை 7,25,97,565 பரப்பளவு 2,75,069 ச.கி.மீ. மத்தியப் பிரதேசம் மக்கள் தொகை 8,46,65,533 பரப்பளவு3,08,000 ச.கி.மீ., ஒரிசாமக்கள் தொகை 4,19,47,358 பரப்பளவு 1,55,707 ச.கி.மீ., குசராத் மக்கள் தொகை 6,03,83,628 பரப்பளவு1,95,024 ச.கி.மீ. தமிழ்நாட்டின்மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்பஅதன் தாயகப் பரப்பு இல்லை.
தமிழ்மக்களே, தாயக நிலத் திற்கும்தண்ணீர்ருக்கும் தான் எதிர்காலத்தில் மிகப்பெரும் போர்கள் நடக்கக் கூடியசூழல் உள்ளது. நமது தாயகஉரிமையைப் பாதுகாக்க விழிப் போடிருக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பேநம் முன்னோர் நமக்கு வைத்து விட்டுப்போன “வீடு” தமிழகம்! அதைஅயலார் ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள்!
இராபர்ட்கிளைவ் துப்பாக்கி யும் பீரங்கியும் கொண்டு- தமிழர் தாயகத்தைப் பறித்து இந்தியா வுடன்இணைத்தான். இப்போது “இந்தியன்’’ என்ற போலி இனப்பெயரைப் பயன்படுத்தி, இந்திக் காரர்களும் மற்றஇனத்தார்களும் தமிழகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.
“இந்தியன்’’என்ற பாசத்தை அப்புறப்படுத்தமுடியாதவர்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரால்கூட தமிழ்நாட்டில் “இந்தியர்களுக்குப்’’ பங்கு கேட்டு வாதாடுவார்கள். ஏமாந்து விடாதீர்கள்!
அமெரிக்கக்கண்டத்திற்குச் சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் போன்ற பல பழங்குடிகள். அவர்களை அழித்தும் ஓரங்கட்டியும் அவர்களின் தாயகத்தைப் பறித்துக் கொண்டவர்கள் தாம் அமெரிக்க ஐக்கியநாடுகள் (யு.எஸ்.ஏ.), கனடா உட்பட பல நாடுகளில்ஆள்கிறார்கள். அந்தக் கதிதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வந்துவிடக் கூடாது.
அன்றாடம்வந்து குவியும் அயலாரைத் தடுக்க - வந்து குவிந்த வர்களைவெளியேற்ற வாருங்கள் தமிழர்களே, ஒன்று சேர்வோம்! வழிமுறைகளைக்காண்போம்!
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 சூன் 16-30 இதழில் வெளிவந்தது.

0 Comments