சென்னை இராசாஅண்ணாமலைபுரம் இராசரத்தினம் முத்தமிழ்மன்ற வளாகத்தில்29.10.2015 அன்று படைப்பாளிகளின் கூட்டமைப்பானசரிநகர் சார்பில் இந்துத்துவாகொலைவெறிக்கு எதிரான சென்னைப்பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சிநடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்மற்றும் கலைஞர்கள் சங்கத்தலைவர்தோழர் ச. தமிழ்ச்செல்வன்தலைமை தாங்கினார்.
எழுத்தாளர்கள் இந்திராபார்த்தசாரதி, திலகவதி, ஞானி பா. செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், அ. மார்க்சு, வீ. அரசு, து.இரவிக்குமார், அருணன், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியா, ஆழி செந்தில்நாதன் எனஏராளமான கலை இலக்கியப் படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும்இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நானும் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க நிகழ்வு!
“இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப்பிரகடனம்” என்ற பிரகடனத்தை தோழர்து. இரவிக்குமார் படித்து வெளியிட்டார். அனைவரும் கையொலி எழுப்பிஆதரித்தனர்; ஆரவாரித்தனர். அப்பிரகடனத்தைஏந்தி எழுந்து நின்றுமுழங்கினர்.
“வரலாற்றின் இடத்தில்புராணங்களையும், பகுத்தறிவின் இடத்தில்மூடநம்பிக்கை களையும், எழுதுகோலுக்குஎதிராக கடப்பாறையையும், துப்பாக்கியையும் வைக்கிற சங்பரிவாரங்களின் அனைத்துமுயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும்என்கிற வேண்டுகோளை தமிழ்ச்சமூகத்தின் முன் வைக்கிறோம்” என்றகுறிப்பிடத் தகுந்த பத்தியும்பிரகடனத்தின் ஒரு பகுதி.
சகிப்பின்மை என்று சொல்வது போதுமா?
சகிப்பின்மைக்கு எதிரானஎதிர்வினை என்பதுபோல் நம்முயற்சிகளைக் கூறுவது நெருடலாகஇருந்தது. இந்துத்துவா குற்றக் கும்பல்நடத்திய கொலை வெறியாட்டங்கள், தாக்குதல்கள், இக்குற்றங்களைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முன்வராத பா.ச.க. ஆட்சியாளர்களின் வன்மம் இவற்றையெல்லாம் “சகிப்பின்மை” (Intolerance) என்றமென்மையான சொல்லுக்குள் அடக்கிவிடமுடியாது. “இந்துத்துவாவன்முறைவெறி என்றுதான் இச்செயல்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும். இவர்களின் செயல்கள் சகிப்புத்தன்மையற்ற மனநிலையோடுநிற்கவில்லை. ஆக்கிரமிப்புத் தன்மைகொண்டவை. நமது எதிர்வினையானது தருக்கத்தில்– தற்காப்பு நிலையில் இருக்கக்கூடாது. தாக்குதல் தன்மை கொண்டிருக்கவேண்டும். தாக்குதல்கள் என்று குறிப்பிடுவதுசொல் கட்டமைப்பு அளவில்தான்; உடல்வகைத் தாக்குதல் அன்று. நமக்கான சொற்கட்டமைப்பைக் கூடஎதிரிகள் முகாம்தான் உருவாக்கித்தருகிறதோ என்று ஐயுறவேண்டியுள்ளது. தமிழ்நாடு எழுத்தாளார்கள்இதுபற்றியும் சிந்திக்க வேண்டும்.
நிகழ்ச்சி நிரலை அவர்கள் அமைக்கிறார்கள்
எழுத்தாளர்கள் மட்டுமின்றிமதவெறி எதிர்ப்பாளர்கள் அனைவரும்சிந்திக்கவேண்டிய ஒரு பொருள்இருக்கிறது. சென்னைப் பிரகடனக் கூட்டத்தில்பேசிய தீக்கதிர் ஆசிரியர்தோழர் குமரேசன் இதுபற்றியமுதல் நிலைக் கருத்தைக்கூறினார்.
“இந்துத்துவா வெறியர்களின்செயல்களுக்கு எதிர்வினையாற்றுவர்களாக நாம் இருக்கிறோம். நமது செயல்பாடுகளுக்கு அவர்கள்எதிர்வினை ஆற்றும் அளவுக்குநம் செயல்பாடுகள் இல்லை”என்பதாகக் கூறினார். அவர்கூற்று சரிதான்!
நிகழ்ச்சி நிரலைமுன்வைத்து – அதன்மீது ஆதரவு– எதிர்ப்புக் கருத்துகள் வரும்படிச்செய்கிறார்கள் இந்துத்துவா வாதிகள்! 1990 – இல் அன்றையத் தலைமைஅமைச்சர் வி.பி.சிங் நடுவண் அரசு அலுவலகங்கள்மற்றும் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல்குழுபரிந்துரையை செயல்படுத்தியபோது அதுபற்றியேஅனைத்திந்திய அளவில் விவாதம்எழுந்தது.
சமூக நீதிக்குஆதரவான பெரும்புயல் கிளம்பியது. அதைத் தடுத்து தனதுநிகழ்ச்சி நிரலை முன்வைக்கஅத்வானி தலைமையில் பாபர்மசூதியை இடித்தது இந்துத்துவாவெறிக்கும்பல். அதன் பலனையும்இந்துத்துவாக் கும்பல் அடைந்தது. இந்திய ஆட்சியைப் பிடித்தது.இப்போது தனிப்பெரும்பான்மையுடன் இந்தியஆட்சியை நடத்துகின்றது.
சமற்கிருதப் பரப்புரை– மாட்டிறைச்சிதடை - முற்போக்கு எழுத்தாளர்கள்கொலை என்று விவாதப்பொருளை அவ்வபோது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்உருவாக்கி வருகின்றன.
ஆரியப் பார்ப்பனர்களின் நயவஞ்சக அறிவுக் கூர்மையைமுறியடிக்கும் அளவிற்கு அதனைஎதிர்க்கும் முகாமில் அறிவுக்கூர்மை இருக்கிறதா, அப்படிஇருப்பதும் களத்திற்கு வருகிறதா– களத்திற்குவந்தாலும் மதச்சார்பற்ற ஆற்றல்கள்அதை ஏற்றுக் கொள்கின்றனவாஎன்ற வினாக்கள் நம்தரப்பில் இருக்கின்றன.
இந்துத்துவா என்றால் என்ன?
முதலில் இந்துத்துவாஎன்றால் என்ன என்றவரையறுப்பில் அறிவுக் கூர்மைவேண்டும். “இந்துத்துவா” என்பதுவெறும் இந்து மதவாதம்அன்று. அதில் ஆரிய இனஆதிக்கம்-வர்ணாசிரமப் பார்ப்பனியஆதிக்கம் – இந்துமத வெறிஆகிய மூன்றும் அடங்கியுள்ளன. இவை மூன்றும் சேர்ந்ததுதான்ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும்இந்தியத் தேசியவாதம் (இந்துராஷ்ட்ரா)
இந்த உண்மைதெரிந்தாலும் இந்துத்துவாவில் உள்ளமூன்று கூறுகளையும் வெளிப்படுத்தும் நிலையில் இன்றைய இந்தியஇடதுசாரிகள் இல்லை என்பதுஒரு துயரம்!
அடுத்து இந்தியாவின்பன்மை பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் மதப்பன்மை – மொழிப்பன்மை– பண்பாட்டுப்பன்மை கூறப்படுகிறது. ஆனால்இனப்பன்மை கூறப்படுவதில்லை. இந்தியாவில்தமிழர் உள்ளிட்ட பலதேசிய இனங்கள் இருக்கின்றன. ஆனால் “இந்தியன்” என்றபெயரில் ஒரு தேசிய இனம்இல்லை. அதைப்போல் திராவிடன் என்றபெயரிலும் ஒரு இனமில்லை. இந்தியாஒரு தேசமல்ல. இந்தியாவில்பல தேசங்கள் இருக்கின்றன. அமெரிக்கஐக்கிய நாடுகள் (USA) என்றுஒருநாட்டைக் குறிப்பிடுகின்றோம். இந்தியாவைஇந்திய ஒன்றியம் என்றுதான்இந்திய அரசமைப்புச் சட்டம்கூறுகிறது. ஆனால் நடைமுறையில் “இந்தியத்தேசம்” என்று குறிப்பிடுவது இந்தியப்பெருமுதலாளியப் பார்ப்பனிய இந்துத்துவாஆற்றல்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம். அவ்வர்க்கங்களின் அரசியல் அமைப்புகளானகாங்கிரசு, பா.ச.க கட்சிகளுக்குஉவப்பாக இருக்கும். ஆனால்மார்க்சிய – லெனினிய அடிப்படையில்தேச - தேசிய இனவரையறுப்பை அறிந்தவர்கள் இந்தியாவைஒரு தேசம் என்றுகூறுவது இந்துத்துவா அமைப்புகளுக்கேவலுச்சேர்க்கும். இந்தியா ஒருநாடென்று (Country) குறிப்பிட்டால்கூட பரவாயில்லை. நாடு என்பது ஓர்ஆட்சிஎல்லையை குறிப்பிடும் சொல். ஒரு தாயகம்- அதில்பொதுமொழி – அவற்றைக் கொண்டதேசிய இனம் முதலியவற்றைக்கொண்டதுதான் ஒரு தேசம். எனவேஇந்தியாவை தேசம் (Nation) என்றுகுறிப்பிடுவது இதில் உள்ளதேசப்பன்மையை மறுப்பதாகும்.
இந்து ராஷ்ட்ரா– பாரத் ராஷ்ட்ரா என்றுஇந்துத்துவா அமைப்புகள் ஆரியப்பார்ப்பனிய அடிப்படையிலான ஒற்றைதேசத்தை முன் வைக்கவசதியாக நாமும் இந்தியாவைத்தேசம் என்று அழைக்கக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின்கற்பனையான பாரதீய தேசத்தைமுறியடிக்காமல் – இந்துத்துவாவை முறியடிக்கமுடியாது. அதற்குத் தேசப் பன்மையைநாம் கையிலெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்றஆற்றல்கள் தமிழ்த் தேசம்என்ற அடித்தளத்தில் நின்றுகொண்டுஆரியப் பார்ப்பனிய தேசியக்கட்டமைப்பான இந்திய தேசம்– இந்தியத் தேசியம் என்பவற்றைமறுக்கும் போதே இந்துத்துவாவின் முதுகெலும்பு முறியும்.
சாதி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைசாதி வழியாகத்தான் இந்துத்துவாவரமுயலுகிறது. பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்டசாதிகளை ஆர். எஸ்.எஸ்.பரிவாரங்கள்வளைத்திட முயலுகின்றன. சாதிமோதல்கள் தமிழ்நாட்டில் தீவிரப்பட்டுள்ளன. இந்து – முஸ்லிம் மோதலைவிட சாதிமோதல்களே தமிழ்நாட்டில்அதிகம். சாதிவாதத்திற்கெதிராக மதச்சார்பற்றஆற்றல்கள் கருத்துப் போராட்டங்களும், களப்போராட்டங்களும் நடத்தவேண்டும். இக்கருத்துகளையும் தமிழ்நாட்டு மதச்சார்பற்ற ஆற்றல்கள்பரிசீலிக்க வேண்டும்.

0 Comments