ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்!
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)
தமிழ்நாடுகொந்தளிக்கிறது! மூத்த அரசியல்வாதிகளோ பதவிவேட்டைக்காகக் கொந்தளிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள்!
இளைஞர்கள்தாம்தமிழர் உரிமைகளுக்காக, தமிழர் நலன்களுக்காகக் கொந்தளிக்கிறார்கள்!
தைப்புரட்சியின்வெற்றியை அடுத்து, நெடுவாசல் புரட்சியில் இறங்கியுள்ளார்கள்.
காவிரிச்சமவெளியில் மீத்தேனை விரட்டியது, காளை தழுவும் உரிமையைமீட்டது போன்ற தமிழர் வாழ்வுரிமைமற்றும் பண்பாட்டு உரிமைகளைக் காத்ததில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் முக்கிய அரசியல்கட்சிகளுக்கும் எந்தப் பங்கும் இல்லை!
இப்போதும், எப்போதும் இந்தக் கட்சிகள் பதவிவேட்டைக்காக - பண வேட்டைக்காகப் பரபரப்பாகச்செயல் படுகின்றன. ஒன்றை எதிர்த்து மற்றொன்றுபோராடுகின்றன. அப்பப்பா, அதில் காட்டும் விறுவிறுப்பும்வேகமும் புயலைக்கூடத் தோற்கடிக்கும்.
அந்தவேகத்தில் நூற்றில் ஒரு பங்கு வேகம்கச்சத்தீவு, காவிரி, பாலாறு, பவானிஉரிமைகளைக் காப்பதில், மீட்பதில் இவை காட்டியதில்லை.
இக்கட்சிகளின்குறிப்பாகக் கழகங்களின் தலைவர்களை இப்படியே கோயில் மாடுகளைப் போல்ஊர்மேய அனுமதித்துவிட்டு, தமிழர் உரிமைப் போராட்டங்களில்மட்டும், இளைஞர்கள் கவனம் செலுத்துவது போதுமா?
நெடுவாசலில்நச்சுக்குழாய் இறக்கும் அறிவிப்பை நடுவண் அமைச்சகம் 15.2.2017 அன்றுஅறிவித்தது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அச்சமும் பீதியும் பற்றிக் கொண்டது. மறுநாள்நெடுவாசல் போராட்டக் களமாகியது.
போராட்டத்தின்12ஆம் நாள், இந்திய அரசுஅறிவிப்பு வந்த 13ஆம் நாள்(28.02.2017) தமிழ்நாட்டின்அ.தி.மு.க. அமைச்சர் கே.சி. கருப்பணன், நெடுவாசல்எரிவளித்திட்டத்திற்குத் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையிடம் நடுவண் அரசு அனுமதிபெறவில்லை என்று ஒரகடத்தில் கூறினார். எப்படி இவர்களின் தமிழர் காப்பு அக்கறை! இவர்தான் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!
அத்தோடுவிட்டாரா கருப்பணன்? இல்லை. அடுத்து அவர்கூறியது, அதிர்ச்சி தருகிறது.
“எரிவளி எடுக்கஎங்களிடம் வரும்போது, அனுமதிப்பதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கைமுடிவைப் பொறுத்தது”.
இத்தனைநாட்களாக சசிகலா அரசு இதில்ஒரு முடிவெடுக்கவில்லை! மதில் மேல் பூனைபோல் இருக்கிறது.
காவிரியில்கசிவு நீரும் தமிழ்நாட்டிற்கு வராமல்தடுக்க, மேக்கேதாட்டில் 66.5 ஆ.மி.க. கொள்ளளவில் பெரிய நீர்த்தேக்கம் கட்டுவோம்என்று திரும்பத் திரும்ப கர்நாடக முதல்வரும்அமைச்சர்களும் அறிவித்து வருகிறார்கள். அதற்கான திட்டச் செலவாகரூ. 5,912 கோடி தொகையும் ஒதுக்கிவிட்டார்கள்.
இதற்குஎதிர்வினையாக, ஒரு கண்டன அறிக்கை- ஒரு மறுப்பறிக்கை அ.தி.மு.க. முதல்வரோ, அமைச்சர்களோவெளியிடவில்லை. இதற்கு சசிகலா வழிகாட்டவில்லையா? அல்லது அவர்களின் ‘குலதெய்வம்’ செயலலிதா வழி காட்டவில்லையா?
கர்நாடகஅணைகளிலிருந்து கசிந்து வரும் நீரையும்மேட்டூருக்கு மேற்கே கோவிந்தபாடி அருகேதமிழ்நாட்டிற்குரிய காவிரி எல்லைக்குள் பெரும்பெரும்மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக்கொண்டுள்ளது கர்நாடக அரசு. தமிழ்நாடுஅரசு இதைத் தடுக்கவில்லை!
இன்னும்சில நாட்களில் மேட்டூரிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாதஅபாயம் காத்திருக்கிறது. இதனாலும் வறட்சியாலும் வரும் மாதங்களில் தமிழ்நாடுகுடிநீர் கிடைக்காமல் தவிக்கப் போகிறது. தண்ணீர் இன்றித் தவிக்கும்கால்நடைகளை அறுப்புக்கு அனுப்ப நேரிடும்; அல்லதுஅவை சாகும்!
நெருங்கிவரும் இந்த பேராபத்தை அரசுகட்டிலில் வீற்றிருக்கும் சசிகலா அமைச்சரவையும் கவனத்தில்கொள்ளவில்லை; ஆட்சியைக் களவாடத் துடிக்கும் மு.க. ஸ்டாலினும் கவனத்தில்கொள்ளவில்லை.
தமிழ்நாடுஅரசின் ஞாயவிலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாகஏற்கெனவே மலிவு விலையில் விற்கப்பட்டபருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் விற்கப்படவில்லை. இந்திய அரசின் உணவுப் பொருள்வழங்கல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எதற்காக என்ற விவரம்சொல்லாமல் இந்திய அரசு வீடுவீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
கூரைவீடா, கட்டட வீடா, மாடிகள் எத்தனை, குளிர்ப்பதனப் பெட்டி இருக்கிறதா, இருசக்கரவண்டி, நாற்சக்கர வண்டி, வருமானம் முதலியவற்றைஎல்லாம் கணக்கெடுக்கிறார்கள். இந்திய அரசுக்காகத் தமிழ்நாடுஅரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இக்கணக்கைஎடுக்கிறார்கள்.
இக்கணக்கெடுப்புமுடிந்த பின் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட80 விழுக்காட்டு மக்களுக்கு ஞாயவிலைப் பொருள்கள் கிடைக்காது - இலவச அரிசியின் நிலையும்வினாக் குறியே!
ஞாயவிலைக்கடைகளை மூட வேண்டும் என்றுஉலக வங்கி, அமெரிக்க - ஐரோப்பியபன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைத் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்திவருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் இந்தியாவின் தலைமை அமைச்சராக உள்ளநரேந்திர மோடியின் ஆட்சி வெளிநாட்டு வேலைத்திட்டங்களைநிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
வேளாண்மைக்கும்குடிநீருக்கும் பயன்படுத்தும் நீரை மீட்டர் வைத்துஅளந்து விற்கும் முறையை மோடி அரசுகொண்டு வர உள்ளது. அதற்கானதேசிய நீர்க் கொள்கையை அதுஅறிவித்து விட்டது. இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தமிழ்நாட்டின்எட்டு கோடி மக்களின் வாழ்வுரிமையைப்பாதுகாக்கும் கட்சி எது?
அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அல்லதுவேறு பெயரில் சின்ன தி.மு.க.க்களாகப்பவனி வரும் எதுவுமோ தமிழ் மக்களைப் பாதுகாக்கப்போராடப் போவதில்லை; ஈகம் செய்யப் போவதில்லை!
பதவி, பணம், விளம்பரம் மூன்றும்தான் இக்கட்சிகளின் உண்மையான இலக்கு!
எழுச்சிபெற்றுள்ள இளைஞர்களே, எதிர்வினையாற்றுவது தேவைதான்; ஆனால் அது மட்டும்மக்களைக் காக்காது! நேர்வினையாற்ற வாருங்கள்! மாற்றுத் திட்டங்களை முன்மொழியுங்கள்! மாற்று அரசியலை முன்மொழியுங்கள்!
பதவி- பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத பண்பை அடிப்படை விதிஆக்கிக் கொள்ளுங்கள்! ஒரு தலைமுறை உழைத்துப்புதிய தமிழ்த்தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்றுஉறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்!
போலிகளைத்தோலுரியுங்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்தித் தலைமையைக் கைப்பற்றி வேறு பெயரில் புதியசந்தர்ப்பவாதத் தேர்தல் ஆதாயக் கட்சியைஉருவாக்கிட முயலும் தன்னலவாதிகளுக்கு இடம்கொடாதீர்கள்!
தமிழினத்தற்காப்பு அரசியல் உண்மையானதாகப் புதியவடிவெடுக்க வேண்டும். அந்தப் பாதை பற்றியும்சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!
இந்தியஅரசின் மக்கள் விரோதத் திட்டங்களை- தமிழர் விரோதச் செயல்பாடுகளை எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டு அரசின் செயலற்ற தன்மையைஎதிர்த்துப் போராட வேண்டும். நடுவண்அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைஎதிர்த்து நாம் போராடும்போது, பார்வையாளராகவீற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் தமிழினத் துரோகத்தைஎதிர்த்துப் போராட வேண்டும்.
கோயில்மாடுகளைப் போல் ஊர் மேயும்தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தன்னல அரசியலை எதிர்த்து, சர்வாதிகாரத் தலைமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். மாற்றுத்திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டும்.
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)

0 Comments