வல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - பேராசிரியர் த. செயராமன்




இந்தியத் தலைமையமைச்சராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 – சனவரி 16-30 மற்றும் பிப்ரவரி 1-15 இதழ்களில் வெளியானது. குசராத்தில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இக்கட்டுரை எழுதப்பட்டது.

வல்லபாய் பட்டேல் உண்மையில் யார்? அவரது நிர்வாகத் “திறமை” என்ன? சமஸ்தானங்களை அவர்தான் இந்தியாவில் இணைத்தாரா? அவரது மதக் கொள்கை என்ன? – எனப் பல்வேறு வினாக்களுக்கு சான்றுகளுடன் விடையளிக்கும் இக்கட்டுரையை எழுதியவர் பேராசிரியர் த. செயராமன்.


வல்லபாய் பட்டேல் என்னும் 
மதவாத அரசியல் குறியீடு 

ஒவ்வொரு காலகட்டத்தில்ஒவ்வொருதலைவரைஉயர்த்திப்பிடிக்கும்உத்திகளைஇந்தியதேசியக்கட்சிகளிடம்காணலாம். அதுஅவர்களுடையஅக்காலக்கட்டத்தின்தேவையைப்பொறுத்துநிகழும்.

அண்ணல் அம்பேத்கரைஅலட்சியப்படுத்தியகட்சிகாங்கிரசுகட்சி. அவர்வாழுங்காலத்தில்அம்பேத்கருக்குநெருக்கடிகொடுத்தது. நேருவின்அமைச்சரவையில்உறுப்புவகித்தாலும்அம்பேத்கர்புறக்கணிக்கப்பட்டார். ஆனால்அதேஅம்பேத்கரைஉயர்த்திப்பிடிக்கவேண்டியதேவைகாங்கிரசுக்கட்சிக்கு1990க்குப்பிறகுஏற்பட்டது. காந்தி, நேருபோன்றதலைவர்களின்மீதானபற்றுகுறைந்துபோய், காங்கிரசின்சுதந்திரப்போராட்டதியாகச்சாயம் வெளுத்துவந்தநிலையில், ஒவ்வொருதரப்புமக்களையும்தன்வாக்குவங்கிவளையத்துக்குள்வைக்கும்உத்தியாகஅம்பேத்கரைகாங்கிரசுஉயர்த்திப்பிடித்தது.

இத்தகைய போக்கைகம்யூனிஸ்ட்டுகட்சிகளிடமும்காணலாம். தமிழகத்தில்தந்தைபெரியார்வெறும்சீர்திருத்தவாதிஎன்றும்தாங்கள்புரட்சியாளர்கள்என்றும்பேசிவந்தகம்யூனிஸ்ட்டுகள், மார்க்சியவாதிகள்பெரியார்படத்தைகையில்ஏற்கத்தொடங்கினர். ஒடுக்கப்பட்டசமூகமக்கள்தனிப்பிரிந்துதலித் கட்சிகளிடமும், அமைப்புகளிடமும்அடைக்கலம்ஆனபோது, பெரியார், அம்பேத்கர்படங்களைஏந்தவேண்டியதேவைஎழுந்தது.

இந்திய தேசியத்தைஏந்திப்பிடிக்கும்பாரதியஜனதாகட்சிஅவ்வப்போதுஏதாவதுநாயகர்களைமுன்னிறுத்திஅரசியல்செய்வதுவாடிக்கை.யாரைமுன்னிறுத்துகிறார்கள்என்பதுஅப்போதையதேவைபொறுத்தது. இந்துதேசியம்பேசும்போதுஇந்துக்களின்அடையாளமானஇராமனைமுன்னிறுத்துவார்கள். இந்துமதஅடிப்படையில்ஆரிய-பார்ப்பனமேலாதிக்கத்தைநிறுவும்நோக்கில்இந்துராஷ்டிரம்என்றஇலக்கைவைத்துபாரதமாதா என்றபடிமத்தைமுன்னிறுத்துவார்கள். காங்கிரசுகட்சிநேருஎன்றநாயகனைமுன்னிறுத்தும்போது, பாரதியஜனதாகட்சியால், அப்படியொருஎல்லாதரப்பினராலும்விரும்பப்பட்ட, போற்றப்பட்டஒருகடந்தகாலத்தலைவரைமுன்னிறுத்தமுடிந்ததில்லை. காந்தியைக்கொன்றவர்கள், கலவரம்செய்தவர்கள்என்றபழிச்சொல்இன்றுவரைதொடர்கிறது.

நிலைமை கொஞ்சம்மாறியிருக்கிறது. முன்புதீண்டத்தகாதகட்சியா?’ என்றுகேள்விஎழும்பும்நிலையிருந்தபா... இன்றுபல்வேறுகட்சிகளுடன்கூட்டணிசேர்ந்துஆட்சிஅமைக்கும்நிலைஏற்பட்டது. பா..இப்போதுஇந்தியாவின்தலைமைஅமைச்சர்பதவிக்கானபோட்டியாளராகஇன்றையகுஜராத்முதல்வர்நரேந்திரமோடியைஅறிவித்திருக்கிறது. முன்புவாஜ்பாயியைஇந்தியத்தலைமைஅமைச்சராக்கியதுபோல, இப்போதுநரேந்திரமோடியைஇந்தியத்தலைமைஅமைச்சராக்கமாநிலக்கட்சிகள்அணிதிரளத்தொடங்கிவிட்டன.

இப்போது நேருகுடும்பத்திற்குஇணையாகவும்மாற்றாகவும், ‘முன்மாதிரியாகக் காட்டவும்ஒருதலைவரைமுன்னிறுத்தவேண்டியதேவைபா..கவுக்குஎழுந்துள்ளது. முன்னமேமக்களால்ஏற்றுக்கொள்ளப்பட்ட, மக்களால்மதிக்கப்படும்தலைவராகவும்அதேநேரம், இந்துமதவாதத்தில்ஊறியவராகவும்உள்ளஒருதலைவரைபா..கண்டுபிடித்துகையிலெடுத்துவிட்டது. அவர்தான்சர்தார்வல்லபாய்பட்டேல்.

வல்லபாய் பட்டேலைத்தன்நாயகனாககுஜராத்முதல்வர்நரேந்திரமோடிமுன்னிறுத்துவதற்குக்காரணங்கள்இருக்கின்றன. இந்துமதவெறிஅரசியலுக்குஏற்பளித்த, இஸ்லாமியர்கள்கொத்துக்கொத்தாகக்கொல்லப்பட்டபோதுஅதைப்பற்றிக்கவலைப்படாமல், இந்துமதவெறிஅமைப்புகளுக்குஆதரவாகநின்றதலைவர், இந்தியாவின்முதல்துணைபிரதமர்மற்றும்முதல்உள்துறைஅமைச்சர்சர்தார்வல்லபாய்பட்டேல். சர்தார்பட்டேலைத்தங்கள்நாயகனாகஇந்துத்துவவாதிகள்முன்னிறுத்தும்போது, காங்கிரசுகட்சிபட்டேலைக்குறைத்துப்பேசிவிடமுடியாது. ஆகவேபட்டேல்எங்களுடையஆள் என்றுஉரிமைகோரும்போட்டிகாங்கிரசு- பா... இடையேதோன்றியுள்ளது.

2013 அக்டோபர்30 அன்று, அகமதாபாத்தில்நடைபெற்றசர்தார்பட்டேல்நினைவுஅருங்காட்சியம்திறப்புவிழாவில்ஒரேமேடையில்தோன்றியஇந்தியத்தலைமைஅமைச்சர்மன்மோகன்சிங்கும், குஜராத்முதலமைச்சர்நரேந்திரமோடியும்சர்தார்பட்டேலைத்தங்களுக்குரியவராகச்சொந்தம்கொண்டாடினார்கள். முதலில்பேசியமோடி, ‘சர்தார்வல்லபாய்பட்டேல்இந்தநாட்டின்முதல்பிரதமாகவந்திருந்தால்இந்தியாவின்எதிர்காலமே, இப்போதுஇருப்பதிலிருந்துமுற்றிலும்மாறுபட்டிருந்திருக்கும் என்றுகுறிப்பிட்டார்.

இதற்குப் பதிலிறுக்கும்வகையில்மன்மோகன்சிங்இவ்வாறுகுறிப்பிட்டார்: “சர்தார்படேல்சமயச்சார்புஅற்றவர். அனைத்துமதத்தலைவர்களும்அவருடையநண்பர்கள். நேருவின்அமைச்சரவையில்துணைப்பிரதமராகஇருந்தார். அவர்களுக்குள்கருத்துவேறுபாடுகள்இருந்திருக்கலாம். ஆனால், ஒருவரைஒருவர்மிகவும்மதித்தார்கள். அவர்மதித்திருந்தஅந்தவிழுமியங்களுக்குஇப்போதுபற்றாக்குறைவந்துவிட்டது. தனதுசொந்ததந்தையைநோக்குவதுபோலவே, காந்தியைசர்தார்பட்டேல்நோக்கினார். மகாத்மாகாந்தி, சர்தார்பட்டேல், மௌலானாஅபுல்கலாம்ஆசாத்ஆகியோர், மற்றவர்கள்கருத்தியல்மாறுபட்டதாகஇருந்தாலும், ஒருவரையொருவர்மதிப்பதற்குக்கற்றுக்கொடுத்தனர். சர்தார்படேல்எப்போதுமேஓர்ஒருங்கிணைக்கப்பட்டசமயசார்பற்றஇந்தியாவைக்கனவுகண்டார்சர்தார்பட்டேல்இருந்த(காங்கிரசு) கட்சியைச்சேர்ந்தவன்என்பதில்பெருமையும்மகிழ்ச்சியும்அடைகிறேன்இவ்வாறுமன்மோகன்சிங்பேசினார்.

போட்டி தொடங்கிவிட்டதுநவம்பர்1ஆம்நாள், சர்தார்வல்லபாய்பட்டேலுக்கு182 மீட்டர்உயரஇரும்புச்சிலைஅமைப்பதற்கானஅடிக்கல்நாட்டுவிழாநடைபெற்றது. உலகிலேயேஉயரமானஇச்சிலைநர்மதைஅணையிலிருந்துமூன்றுகிலோமீட்டர்தொலைவில், நர்மதைமாவட்டத்தில்கேவடியாஎன்றதீவுப்பகுதியில்2,603 கோடிரூபாய்செலவில்அமைக்கப்படஇருக்கிறது. இவ்விழாவில்பேசியமோடிபட்டேல்மீதானஇந்துத்துவவாதிகளின்உரிமைகோரலைத்தொடர்ந்தார்.

சர்தாரைஒருஉண்மையானமதச்சார்பற்றதலைவர்என்றுகூறியபிரதமருக்குநன்றியுடையேன். சோமநாதர்ஆலயத்தைத்திரும்பக்கட்டியஉண்மையானமதச்சார்பற்றவர். அவருடையமதச்சார்பின்மைகோயிலைக்கட்டுவதிலிருந்துதடுத்துவிடவில்லை. இன்றுசர்தார்பட்டேலின்மதச்சார்பின்மைதேவைப்படுகிறது. வாக்குவங்கிஅரசியலுக்குத்தேவைப்படும்மதச்சார்பின்மைஅல்ல.சர்தார்பட்டேல், அனைத்துசமூகங்களின், சமூகப்பரிவுகளின், மொழிகளின்மன்னராட்சிநாடுகளையும்ஒருங்கிணைந்தார்; எந்தஒருஅடையாளப்படியும்(On any count) பிரிக்க முயற்சிக்கவில்லை. சர்தாரின்வகையிலானமதச்சார்பின்மைநாட்டுக்குத்தேவைப்படுகிறது, நாட்டைப்பிரிக்கின்றவாக்குவங்கிஅரசியல்வகைஅல்ல.”

சர்தார் வல்லபாய்பட்டேலைகாங்கிரசும், பா..கவும்போட்டிபோட்டுக்கொண்டுஏற்றிப்போற்றுவது, சொந்தம்கொண்டாடுவதும்எதிர்வரும்2014 பொதுத்தேர்தலைஉள்ளத்திற்கொண்டுதான்.

ஆனால் அடிப்படையானசிலகேள்விகள்சர்தார்பட்டேலைப்பற்றிஎழுகின்றன. சர்தார்பட்டேல்உண்மையிலேயேமதச்சார்பற்றவரா? ஒருதுணைபிரதமர்மற்றும்உள்துறைஅமைச்சர்என்றமுறையில்அவர்தன்கடமைகளைஆற்றினாரா? 1948இல்இந்தியா-பாகிஸ்தான்பிரிவினையைஒட்டிஎழுந்தவகுப்புக்கலவரங்களைஅவரால்சமாளிக்கமுடிந்ததா? கடந்தகலவரங்களும்அதற்குபட்டேலின்எதிர்வினையும்அவருடையநிர்வாகத்திறனுக்குச்சான்றுகூறுகின்றனவா?

காவல்துறைக்குப் பொறுப்பானஉள்துறைஅமைச்சர்என்றமுறையில்காந்தியைப்படுகொலையிலிருந்துகாக்க, கொலைமுயற்சிகள்முன்னமேதொடர்ந்துநடைபெற்றுவருகின்றனஎனத்தெரிந்திருந்தும், என்னஏற்பாடுகளைச்செய்திருந்தார்? கொலையாளிகள்உறுப்புவகித்தமதவாதஅமைப்புகளிடம், காந்தியின்கொலைக்குமுன்னும்பின்னும், கரிசனம்காட்டியமைக்குஎன்னகாரணம்?

இந்துக்களையும், முஸ்லிம்களையும்பட்டேல்சமமாகத்தான்கருதினாரா? முஸ்லிம்களைஇந்துமதவாதிகளும், கோபமுற்றஇந்துமக்களும்தாக்கியபோதுஅதைவரவேற்கும்போக்குபட்டேலிடம்காணப்படஎன்னகாரணம்?

நேருவுக்கும் பட்டேலுக்கும்இடையிலானமுரண்பாடுகள்தெரிந்தவை; தன்னைத்தலைவராகஉருவாக்கியகாந்தியாருடன்பட்டேல்முரண்படஎன்னகாரணம்?

இந்தியா முழுவதும்இருந்தசமஸ்தானங்கள்வல்லபாய்பட்டேலின்அருமுயற்சியால்தான்இந்தியாவுடன்ஒருங்கிணைக்கப்பட்டனவா?

உள்துறைச் செயலர்வி.பி. மேனன்மற்றும்மவுண்ட்பேட்டன்பிரபுஅல்லாமல்சமஸ்தானங்களையும், மன்னர்ஆட்சிப்பகுதிகளையும்இணைத்ததில்பட்டேலின்பங்குஎன்ன? –

இக்கேள்விகளுக்குவரலாறுபுதைத்துவைத்திருக்கும்பதில்கள்வெளிப்படும்போது, வல்லபாய்பட்டேல்அளவுக்குஅதிகமாகப்புகழப்பட்டிருக்கிறார்; மிகைப்படுத்திக்காட்டப்பட்டிருக்கிறார்என்றஉண்மைதெளிவாகாமற்போகாது. அப்படிப்பட்டமிகைத்தோற்றஉருவாக்கத்திற்கும்அவர்மதவாதஅரசியல்சார்புகொண்டிருந்தார்என்பதன்றி, வேறுகாரணங்கள்இல்லைஎன்பதும்புலனாகும்.

மதக்கலவரமும் பட்டேலும்

இந்தியா- -- பாகிஸ்தான்பிரிவினைக்குப்பின்நிலப்பகுதிகள்வரையறுக்கப்படும்வரைஅதன்விளைவுஎவருக்கும்சரியாகப்புரியவில்லை, ஆனால்பஞ்சாபும், வங்காளமும்மதஅடிப்படையில்பிரிக்கப்பட்டு, கிழக்குபஞ்சாபில்உள்ளமுஸ்லீம்கள்மேற்குநோக்கியும், மேற்குபஞ்சாபிலிருந்தும்பிறபகுதிகளிலிருந்தசீக்கியரும், இந்துக்களும்இந்தியப்பகுதிநோக்கியும்இடம்பெயரவேண்டியநிலைஏற்பட்டபோதுதான்பிரச்சினையின்தீவிரம்புரிந்தது.

பிரிட்டிஷ் வழக்கறிஞரானசிர்ல்ராட்கிளிப்வரைந்தஇந்திய---பாகிஸ்தானியஎல்லைக்கோடுமொழிவழிஇனத்தவர்களைமதஅடிப்படையில்பிரித்தது. ஆனாலும்இந்துக்களையும்முஸ்லீம்களையும்துல்லியமாகவாழ்விடங்களோடுபிரிக்கமுடியவில்லை. வரலாற்றின்மிகப்பெரியமாந்தஇடப்பெயர்வுநிகழ்ந்தது. 15 மில்லியன்மக்கள்(1 கோடியே50 இலட்சம்) இடம்பெயர்ந்தார்கள். இந்து- முஸ்லிம்கலவரம்மீண்டும்தொடங்கிவிட்டது.

ராட்கிளிப்பின் எல்லைப்பிரிவுஆகஸ்ட்17 -----1947 அன்றுஅறிவிக்கப்பட்டது. மேற்குபஞ்சாபிலிருந்துஇந்துக்களையும்சீக்கியர்களையும்விரட்டத்தொடங்கினர். அதுபோன்றேகிழக்குபஞ்சாபில்அமிர்தசரசில்முஸ்லிம்எதிர்ப்புநடவடிக்கைகள்தொடங்கின. தொடர்ந்துஎல்லையோரப்பகுதியெல்லாம்கலவரம்தொடங்கியது. பாகிஸ்தான்பகுதியிலிருந்துவெளியேறியஇந்துக்களும்சீக்கியர்களும்டில்லிமாகாணம்வரைவந்து, அன்றையஒருங்கிணைக்கப்பட்டமாகாண(United Province) மேற்குமாவட்டங்களில்குடியேறினர். அதுபோன்றேவன்முறைக்குஇலக்கானமுஸ்லிம்கள்எல்லாவற்றையும்விட்டுவிட்டுமேற்குபாகிஸ்தான்நோக்கிஓடினர்.

தலைநகரமான டில்லிபெரும்கலவரத்தைசந்தித்தது. டில்லியின்இந்துக்கள்வாழும்பகுதியானகரோல்பாக்கில்யாரோவெடித்தகுண்டுஒன்றுகலவரத்தைத்தொடங்கிவைத்தது. இக்கலவரங்கள்முன்னமேதிட்டமிடப்பட்டவையாகஇருந்தன. தன்கண்முன்னேயே, வாடிவதங்கிவந்துகொண்டிருந்தகூட்டத்தில்ஒருவருடைய10 வயதுமகளைமுஸ்லிம்வன்முறையாளர்கள்சிலர்பறித்துக்கொண்டுஓடியதைக்கண்டுநேருஇரவுமுழுவதுதூங்கமுடியாமல்கிடந்தார். இதுபோன்றே, இஸ்லாமியப்பெண்களைஇந்து, சீக்கியவன்முறையாளர்கள்அள்ளிச்சென்றனர்.

தனது மக்கள்திடீரென்றுவகுப்புவாதக்கொடூரத்தில்இவ்வளவுவல்லமையுடன்ஈடுபட்டதுநேருவுக்குஅதிர்ச்சியளிக்கும்விஷயமாகஇருந்தது. ஏற்கெனவேஒருகூட்டத்தின்போது, இதையெல்லாம்ஒதுக்கித்தள்ளிவிட்டுதோள்களைக்குலுக்கியபடி, ‘ஆங்.. இதுநடக்கவேண்டியதுதான் என்றுகூறியநேருவின்நட்புள்ளஎதிரியானபட்டேலால்சகிக்கமுடியும். ஆனால்நேருவால்முடியவில்லை.”

(டொமினிக்லேப்பியர்- லேரிகாலின்ஸ், ‘நள்ளிரவில்சுதந்திரம், அலைகள்வெளியீட்டகம்சென்னை, 1997, பக்-422)

1947 ஜீலைமாதம், காந்தியும்நேருவும்பஞ்சாப்எல்லையில்அகதிகளைச்சந்தித்துக்கொண்டிருந்தபோது, பட்டேல்முஸ்லிம்களைடெல்லியிலிருந்துவிரட்டுவதில்குறியாகஇருந்தார். ஒருமுறைசர்ஸ்ட்ராபோர்டுகிரிப்சிடம்பட்டேல்ஒருமுறையீடுசெய்தார்: ’கலவரம்என்பதுமுஸ்லிம் -இந்துஆகியஇருவருமேஈடுபடும்விளையாட்டுதான்என்பதும், பாதிப்புக்குஉள்ளாகும்நிலையில்சாத்வீகஇந்துக்களும்பழிவாங்கலாம்என்பதையும்புரிந்துகொண்டநிலையில், முஸ்லிம்லீகைஇலண்டனுக்குஅழைத்தீர்கள். ஒருதீர்வைஎட்டியபோதுஜின்னாவுக்குஅழைப்புவந்தது. மேலும்பிரச்சினைகளிலும்வன்முறைகளிலும்ஈடுபடுவதன்மூலம்மேலும்சலுகைகளைப்பெறலாம்என்றபுரிதலைஇஸ்லாமியருக்குஜின்னாஉருவாக்கினார். படுகொலையில்ஒருசமூகம்மற்றொன்றைவிஞ்சியபோது, தீர்வுக்கானநேரம்வந்தது. இன்னும்கொஞ்சம்இரத்தம்சிந்தப்பட்டிருந்தால்அதுகாங்கிரசுக்குஉதவியிருக்கும்; முஸ்லிம்லீகைபலவீனப்படுத்தியிருக்கும்

(வல்லபாய்பட்டேல்கடிதங்கள், தொகுப்பு3, பக் -314; A.G.Noorani, ‘Patel’s Communalism - a documented record’, Frontline, Chennai, 13 December 2013, pp.4-21)

வங்காளத்தில் கலவரத்தில்முஸ்லிம்கள்பெரும்தாக்குதலுக்குஉள்ளாகி, அதைத்தடுக்கவேஆள்இல்லாநிலைஏற்பட்டபோது, பட்டேல்1946 ஆகஸ்ட்21 அன்றுஇராஜகோபாலாச்சாரியாருக்குஎழுதியகடிதத்தில், இவ்வாறுகுறிப்பிட்டார்: “பாதுகாப்பும்ஒழுங்கும்முற்றிலுமாகநொறுங்கியது; இவற்றைத்தடுக்கஎவருமேஇல்லை. ஆனாலும், முஸ்லீம்களுக்குஇதுஒருபாடமாகஅமையும். ஏனெனில், இறந்தவர்களில்விகிதாச்சாரத்தில்முஸ்லிம்களேகணிசமாகஅதிகம்என்றுநான்கேள்விப்படுகிறேன்.’’

நேரு பீகார்கலவரம்(அக்டோபர்1946) பற்றிபட்டேலுக்குக்கடிதம்எழுதினார்; “முஸ்லிம்களைஒழிக்கஇந்துகலகக்கும்பல்களால்முன்னெடுக்கப்பட்டதெளிவானமுயற்சி”என்றுநேருகுறிப்பிட்டார். பட்டேல்அதைப்பற்றிக்கவலைப்படவில்லை. ‘முஸ்லிம்கள்தாக்கினார்கள் என்றபுகார்வந்தாலே, அதைப்பற்றிவிசாரிக்காமலேஅப்பகுதிகளில்உள்ளஇந்துக்களின்கோழைத்தனம்அவமானகரமானது”என்றுபட்டேல்கருத்துரைத்தார்.

(A.G.Noorani, Patel’s Communalism, p.16)

ஆர்.எஸ்.எஸ். மற்றும்பா... தலைவர்கள்பட்டேலின்புகழ்பாடுவதற்குக்காரணங்கள்இருக்கின்றன. இந்துமகாசபையிலும், ஆர். எஸ்.எஸ்.இலும்இருந்தபலர்காங்கிரசிலும்இருந்தார்கள். ஜனசங்கத்தை(இன்றையபா..) உருவாக்கியசியாமாபிரசாத்சாட்டர்ஜிகூடகாங்கிரசில்தான்இருந்தார். அத்வானிகூறுகிறார்:

இந்திய இஸ்லாமியர்கள்குறித்தசர்தார்பட்டேலின்அணுகுமுறைபல்வேறுதருணங்களில்தவறுதலாகப்புரிந்துகொள்ளப்பட்டுள்ளது; அவற்றைநீக்குவதுஅவசியம்.’’ (தினமணி, திருச்சி, 25 டிசம்பர்2013)

அது ஏன்அவசியமென்றால், இவர்களுடையஇப்போதையஅரசியல்தேவையைமதவாதப்போக்கைக்கொண்டிருந்தவல்லபாய்பட்டேல்நிறைவுசெய்யஇருக்கிறார்.

காந்தி ஆன்மிகவாதியும்அரசியல்வாதியுமாகஇருந்தார். பலகுறைபாடுகள்இருந்தாலும்கூட, அவர்ஓர்ஒப்பற்றமக்கள்தலைவராகப்பரிமாணங்கொண்டிருந்தார். இந்து- முஸ்லிம்ஒற்றுமையில்உண்மையிலேயேநாட்டமும்நம்பிக்கையும்கொண்டிருந்தார். இஸ்லாமியர்களைப்பொறுத்தவரைஜின்னாவைவிடவும்நம்பிக்கைக்குரியவராய்காந்தியேதிகழ்ந்தார். இஸ்லாமியர்பால்அவர்கொண்டிருந்தபரிவுதான்அவரதுஇறப்பையும்கொண்டு வந்தது. கலவரம்வெடித்தபோதெல்லாம்உண்ணாநிலைமேற்கொண்டுதன்இறப்பைக்காட்டிஇந்து -முஸ்லிம்இரு தரப்பாரையும்வழிக்குகொண்டுவந்தார். இந்தவழிமுறையில்அவர்தொடர்ந்துவெற்றிகண்டார்.

நேருவை தன்தெரிவுசெய்யப்பட்டமகன் என்றுகாந்திஅறிவித்தார். பட்டேலைஅரசியலுக்குக்கொண்டுவந்தவரும், தலைவராகஉருவாக்கியவரும்காந்திதான். காந்திதான்பட்டேலின்குரு. பட்டேல்காங்கிரசைத்தன்கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துவிட்டார். பட்டேல்கைகாட்டுபவர்தான்காங்கிரசின்தலைவர்என்றநிலைஉருவானது. அப்படிதான்இன்னொருமதவாதியானபுருஷோத்தம்தாஸ்டாண்டனை, நேருவின்எதிர்ப்புக்கிடையே, காங்கிரசின்தலைவராகத்தேர்ந்தெடுக்கச்செய்தார்பட்டேல்.

நிலைமை. இவ்வாறுஇருந்தாலும்காந்திநேருதான்இந்தியாவின்பிரதமராகவரவேண்டும்என்றுகருதினார். காந்தியின்வற்புறுத்தலாலேயேபட்டேல்போட்டியிடாமல்ஒதுங்கிக்கொண்டார். நேருஇந்தியாவின்பிரதமராகவரவேண்டும்என்றுகாந்திக்கருதியமைக்குக்காரணம், நேருவின்பால்அவருக்குஇருந்தஅன்புகாரணமல்ல; இந்தியமுஸ்லிம்கள்பற்றியஅவருடையகவலைதான்முக்கியகாரணம். கட்சியின்பெருத்தஆதரவில்லாமலேதான்நேருபிரதமரானார். இதற்குக்காரணம்நேருவிடம்குடிகொண்டிருந்தமதச்சார்பின்மைதான், இன்றுசங்பரிவார்நேருவைவெறுக்கிறது, பட்டேலைத்துதிக்கிறது. என்னகாரணம்? அதேகாரணத்திற்காகத்தான்பட்டேலைப்புறந்தள்ளிவிட்டுநேருவைஇந்தியாவின்பிரதமராகச்செய்தார்காந்தி.

வல்லபாய் பட்டேல்நிர்வாகத் திறன் உள்ளவரா?

வல்லபாய் பட்டேல்மிகப்பெரியநிர்வாகிஎன்றுபலரும்பதிவுசெய்கிறார்கள். வல்லபாய்பட்டேல்பெரியகுற்றவியல்வழக்கறிஞர்என்பதிலும்காங்கிரசுகட்சியைத்தன்கைப்பிடிக்குள்வைத்துக்கொண்டவர்என்பதிலும்சந்தேகமில்லை. ஆனால், நாட்டின்நிர்வாகத்தில்என்னவாகஇருந்தார்? “நாடு சுதந்திரம்பெற்ற பிறகு, துணைபிரதமர், உள்துறைஅமைச்சர்ஆக, தேசப் பிரிவினைஉள்ளிட்டநெருக்கடியானகாலத்தில்நாட்டைஉறுதியாகவழிநடத்தினார்”என்றுநரேந்திரமோடியின்முன்னெடுப்பின்வல்லபாய்பட்டேலுக்குசிலையெடுக்கும்முயற்சிகளில்ஈடுபட்டுள்ளோர்ஊடகங்களில்பதிவுசெய்கின்றனர். (தினகரன், 16.12.2013)

இந்தியா - பாகிஸ்தான்பிரிவினைபோன்றநெருக்கடியானகாலக்கட்டத்தில்பட்டேலின்நிர்வாகத்திறமைவெளிப்பட்டதால்டில்லியில்வன்முறைஉச்சக்கட்டத்தைஎட்டியது. ’அல்லாஹூஅக்பர் என்றுகுரல்கொடுத்து, பதிலுக்குக்குரல்வந்தால்அங்கேபுகுந்துமுஸ்லிம்களைசீக்கியர்கள்வெட்டிசாய்த்தார்கள். ‘ஆர்.எஸ்.எஸ்கும்பல்பர்தாஅணிந்தஒருமுஸ்லிம்பெண்ணைக்கடத்தியது. அந்தப்பெண்மீதுபெட்ரோலைஊற்றி, நேருவின்யார்க்சாலைவீட்டுவாசலுக்குமுன்னால்தீவைத்துக்கொளுத்தினார்கள்.’ அகதிகளாகவந்தஇந்துக்களும், சீக்கியர்களும்மசூதிகளுக்குள்குடியேறினார்கள். காவல்துறையிலிருந்தமுஸ்லிம்கள்ஓடிப்போய்விட்டார்கள்செப்டம்பர்4ஆம்தேதிபிற்பகலில், 1000க்கும்அதிகமானவர்கள்ஏற்கனவேஇறந்துவிட்டநிலையில், இந்தியசிவில்சர்விஸ்ஊழியர்கள்கூட்டத்தைவி.பி. மேனன்கூட்டினார். “டில்லியில்வலுவானநிர்வாகம்இல்லை. தலைநகரும்நாடும்சீரழிவைஎதிர்நோக்கியுள்ளனஎன்பதுஅவர்களின்ஒருமனதானமுடிவாகஇருந்தது.’’ (டொமினிக்லேப்பியர், பக்.433)

பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுசிம்லாவில்ஒய்வுக்குச்சென்றுவிட்டார்மவுண்ட்பேட்டன்பிரபு. அவர்இப்போதுமுன்னாள்கவர்னர்ஜெனரல். ஏனெனில்இந்தியாவிடுதலைபெற்றுவிட்டது. பொறுப்புபிரதமர்நேருவின்கையிலும், உள்துறைஅமைச்சரும்துணைபிரதமருமானபட்டேலின்கையிலும்இருந்தன. இந்நிலையில்ஓய்வில்இருந்தமவுண்ட்பேட்டன்பிரபுவைதொலைபேசியில்உள்துறைச்செயலர்வி.பி. மேனன்அவசரமாகத்திரும்பிவரும்படிஅழைத்தார்.

இருபத்து நான்குமணிநேரத்துக்குள்மவுண்ட்பேட்டன்வராவிட்டால், நாம்இந்தியாவைஇழந்திருப்போம்என்றுமேனன்குறிப்பிட்டுக்கெஞ்சினார். 1947 செப்டம்பர்6 அன்றுகாலைமவுண்ட்பேட்டன்அறையில், மவுண்ட்பேட்டன், நேரும்பட்டேல்ஆகியமூவரின்இரகசியக்கூட்டம்நடந்தது. “அங்கேமவுண்ட்பேட்டன், நேரு, பட்டேல்எனமூன்றுபேர்இருந்தனர். இரண்டுஇந்தியத்தலைவர்களும்சோகமாகவும், சோர்ந்துபோயும்இருந்தார்கள். ‘தண்டனைக்குள்ளானபள்ளிச்சிறுவர்கள்இருவரைப்போல் அவர்கள்கவர்னர்ஜெனரலைப்பார்த்தனர்”.   (டொமினிக் லேப்பியர், பக். 435)

நேருவுக்கும், பட்டேலுக்கும்நெருக்கடிகாலத்தில்எப்படிநிர்வாகம்செய்வதுஎன்பதுதெரியவில்லை. ‘எங்களின்அனுபவம்போராட்டம்தானேதவிரநிர்வாகம்அல்ல என்றுதெரிவித்தனர்.

நேருவும் பட்டேலும்முன்வைத்தவேண்டுகோள்: “காலனியாதிக்கம்எங்களுக்குஅளிக்கமறுத்தஅனுபவத்தையும்அறிவையும்நீங்கள்பெற்றிருக்கிறீர்கள். ஆங்கிலேயரானநீங்கள்எங்கள்வாழ்நாள்முழுவதும்இங்கேயேஇருந்துவிட்டுஇப்போதுநாட்டைஎங்களிடம்விட்டுஎளிதாகவெளியேறுவதுமுறையல்ல. நாங்கள்நெருக்கடியில்இருக்கிறோம். எங்களுக்குஉதவிதேவைப்படுகிறது. இந்தநாட்டைநீங்களேஆளமுடியுமா?’’ (மேலது. பக்.436)

மவுண்ட்பேட்டன், இந்தநாட்டைநீங்கள்மீண்டும்என்னிடம்ஒப்படைக்கிறீர்கள்என்றுதெரிந்தால்அத்தோடுஉங்கள்அரசியல்முடிந்துவிடும். என்றுகூறினார். “அதனைமறைத்துவைக்கநாங்கள்ஒருவழிகண்டுபிடிக்கிறோம்.’’ என்றுநேருகூறினார்.

கடற்படைத் தளபதியாகஅனுபவம்பெற்றிருந்தமவுண்ட்பேட்டன்நெருக்கடிக்காலக்கட்டத்தில்எப்படிசெயல்படவேண்டும்என்றுஅறிந்தவர். நேருவையும், பட்டேலையும்பொம்மையாகமுன்னிறுத்தி, மளமளவெனசெயல்திட்டங்களைவகுத்தார். “சுதந்திரம்பெற்றமூன்றேவாரங்களுக்குப்பின்கடைசி நேரசமாளிப்புக்காகஇந்தியாமீண்டும்ஒருமுறைஆங்கிலேயர்ஒருவரால்ஆளப்படவிருக்கிறது.’’ (மேலது.)

லுயூட்டன்ஸ் அரண்மனையைப்போர்க்காலஇராணுவத்தலைமையகம்போல்மவுண்ட்பேட்டன்மாற்றினார். அவரதுமனைவிஎட்வினாசெஞ்சிலுவைச்சங்கம்பொறுப்பேற்றுஅவசரகதியில்நிவாரணப்பணிமேற்கொள்ளப்பட்டது. நேருஅமைதியாயிருந்தார். பட்டேல்விரக்தியில்இருந்தார். மவுண்ட்பேட்டன்முழுநிர்வாகியாகமாறிப்போயிருந்தார். நிலைமைசமாளிக்கப்பட்டது.

ஒரேஇரவில்நிலைமையில்மாற்றம்ஏற்பட்டது, மாட்டுவண்டிவேகத்திலிருந்துஜெட்வேகத்தைஅதுஅடைந்தது”என்றுகுழுவில்பங்கேற்றஇந்தியர்ஒருவர்குறிப்பிட்டார். (மேலது, பக்.440)

இன்னோரு புறம், காந்திஇந்து, முஸ்லிம், சீக்கியர்களிடையேமன்றாடிக்கொண்டிருந்தார். மவுண்ட்பேட்டன்பிரபுவால்ஒருமனிதன்- ஒருபடை (Single Man Army) என்றுவருணிக்கப்பட்டகாந்திமக்களைத்தன்வழிக்குக்கொண்டுவருவதில்வெற்றிகண்டார். அவருடையநடைபயணமும், சாகும்வரைஉண்ணாநிலையும், மன்றாட்டுகளும்டில்லியிலும்பிறபகுதிகளிலும்அமைதியைகொண்டுவரஉதவின. இந்து- முஸ்லிம்கலவரங்களில்2,25,000 பேர்முதல்5,00,000 பேர்வரைஇறந்ததாக. வெவ்வேறுகணக்கீடுகள்தெரிவிக்கின்றன. அமைதியைக்கொண்டுவருவதில்மவுண்ட்பேட்டனும், காந்தியும்பெரும்பங்குவகித்தனர்.

வல்லபாய் பட்டேலின்நிர்வாகத்திறமைஎப்போதுவெளிப்பட்டதுஎன்பதுஇன்றுவரைஅறியப்படாதஒன்று. வல்லபாய்பட்டேல்இந்தியாவின்துணைபிரதமாராகவும்உள்துறைஅமைச்சராகவும்15 ஆகஸ்ட்1947 முதல்15 டிசம்பர்1950 வரை(அவரதுஇறப்புவரை) பதவிவகித்தார். இக்காலக்கட்டத்தில்அவருடையபெருஞ்சாதனையாகஎதையும்குறிப்பிடுவதற்கில்லை. ‘இந்தியாவைஒருங்கிணைத்தார் என்றும்அதுஅவருடையஇமாலயசாதனைஎன்றும்குறிப்பிடுவோர்உண்டு. அதுகுறித்தும்அறிந்துகொள்ளவேண்டியசெய்திகளும்உண்டு.

சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தது யார்?

.ஜி. நூராணி, “பட்டேலின்சாதனைகள்பெரியஅளவில்மிகைப்படுத்தப்பட்டுள்ளன; அவருடையமோசமானதோல்விகள்காணப்படாமல்புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவரைஇந்தியாவின்பிஸ்மார்க்என்றுஅழைக்கும்வரலாற்றுத்தற்குறிகள் இவைஇரண்டுபற்றியும்அறியமாட்டார்கள்.”என்கிறார்

(A.G. Noorani, Patel’s Commuan alism, Frontline 13 December, 2013, p-10)

.ஜி. நூராணிஇந்தியாவுடன்மன்னராட்சிப்பகுதிகள்ஒருங்கிணைக்கப்பட்டதுபற்றிஇப்படிக்கூறுகிறார். ஒருங்கிணைப்புஇருகட்டங்களைக்கொண்டது. முதற்கட்டம், சமஸ்தானங்கள்இந்தியாவுடன்ஒப்பிவருதல்(accession). இரண்டாவது கட்டம், அவைமறுசீரமைப்புசெய்யப்பட்டுB பிரிவுமாநிலங்களாகஒருங்கிணைக்கப்படுவது(merger). இவற்றுள்முக்கியமானதுமுதற்கட்டம். இக்கட்டத்தில்தான், சமஸ்தானங்கள்மற்றும்மன்னராட்சிப்பகுதிகளின்மிகமுக்கியஒப்புதலைப்பெறுதலும்(ஒப்பந்தங்கள்) ஒருங்கிணைப்பும்நடைபெற்றன.

முன்புநம்பிக்கையற்று, அந்தப்புரங்களில்கிடந்த, மன்னர்களுடையநாடுகளைஇந்தியாவுடன்இணைக்கஅதிகம்பேசவேண்டியதேவைகூடஇருக்கவில்லை. 1947 ஆகஸ்ட்15க்குள்(அதாவதுவல்லபாய்பட்டேல்உள்துறைஅமைச்சராகப்பொறுப்பேற்பதற்குமுன்னரே) அனைத்துசமஸ்தானங்களின்அரசர்கள்ஜீனகத், காஷ்மீர், ஐதராபாத்தவிர- இந்தியாவுடன்இணைந்துஒப்பந்தங்கள்கையொப்பமிடப்பட்டு விட்டன.”

இதை சாதித்ததுயார்? மவுண்ட்பேட்டன்பிரபுவும்உள்துறைச்செயலராகப்பொறுப்பேற்றவி.பி. மேனனும்தான்இந்தியஒருங்கிணைப்பைச்சாதித்தவர்கள். 1947 ஜீலை28 முதல்மவுண்ட்பேட்டன்முயற்சிகளைவி.பி. மேனன்வல்லபாய்பட்டேலுக்குதெரிவித்துவந்தார். மவுண்ட்பேட்டனின்திறன்களும், மேனனின்சட்டபூர்வமாகப்பிரச்சினைகளைத்தீர்க்கும்திறமையும்உண்மையில்இதைச்சாதித்தன. (மேலது.)

இந்தியாவுடன் சமஸ்தானங்கள்ஒருங்கிணைப்புகுறித்துசிலகருத்துக்களை.ஜி. நூராணி பதிவுசெய்திருக்கிறார்.

இணைப்பு ஒப்பந்தம்(Instrument of Accession) என்பதுமுன்னமே1935ஆம்ஆண்டுசட்டம்செயல்படத்தொடங்கியதுமேதயாரிக்கப்பட்டது. ஆனால்அச்சட்டத்தில்கூட்டாட்சிமுறைசெயல்பாட்டுக்குவராமல்இருந்தது. சமஸ்தானங்கள்இணைவதுகுறித்துசர்தார்பட்டேலுக்குஇப்படிஒருகருத்துஇருந்தது: ‘ஆங்கிலேயர்வெளியேறியதும்மன்னராட்சிப்பகுதிகளில்உள்ளமக்கள்புரட்சிசெய்துமன்னர்களைநீக்கிவிட்டு, காங்கிரசைஆதரித்துக், இந்தியாவுடன்இணைவார்கள்.’ ஆனால்அந்தந்தமன்னர்களுக்கும்தனித்தனிப்படைகள்இருந்தன. அவற்றைஆங்கிலேயர்களேபயிற்றுவித்திருந்தனர். அவற்றைக்கொண்டுகலகத்தைமன்னர்களால்அடக்கமுடியும்என்றுமவுண்ட்பேட்டன்பிரபுநினைவூட்டினார். ஆங்கிலேயர்களின்அரசியல்அமைச்சகத்துறையின்அறிவுறுத்தலின்பேரில்அப்படைகளும்தயார்நிலையிலேயேஇருந்தன. ஆகவே, அமைதியானவழியிலேயேமன்னராட்சிப்பகுதிகளைஇணைப்பதுகுறித்துவைசிராய்மவுண்ட்பேட்டன்பிரபுஆலோசனைவழங்கினார். மன்னர்கள்தங்கள்பட்டங்களையும், தனிச்சொத்துக்களையும்வைத்துக்கொள்ளஅனுமதிக்கப்பட்டு, இந்தியா- பாகிஸ்தான், ஆகியவற்றில்ஏதாவதுஒருடொமினியனில்சேர்ந்துகொள்ளவேண்டும்என்றுகூறினார். இதைஏற்றுக்கொண்டுபகல்பூர்போன்றவைபாகிஸ்தானுடன்சேரமுடிவெடுத்தன. மேலும்பாதுகாப்பு, வெளியுறவு, தொடர்வழிகள்போன்றதுறைகள்மட்டுமேமையஅரசுடன்இருக்கும்என்றும்இதுபற்றிசிந்திக்குமாறுமவுண்ட்பேட்டன்வல்லபாய்படேலிடம்கூறினார்.

பட்டேல் வி.பி. மேனனிடம்தன்கருத்தைக்கூறினார். மவுண்ட்பேட்டன்கூறியதைத்தாம்ஏற்பதாகவும், 565 மன்னர்நாடுகளும்தம்பழக்கூடையில்விழவேண்டும்என்றும்பட்டேல்கூறினார். சிலபிரிந்துசெல்வதைத்தவிர்க்கவியலாதுஎன்றுமவுண்ட்பேட்டன்கூறினார். இத்திட்டத்தைவகுத்தவர்கள்மவுண்ட்பேட்டனும், வி.பி. மேனனும்ஆவர். இதன்படிமூன்றுநாடுகளைத்தவிர(ஜீனகத், ஐதராபாத், காஷ்மீர்) பெரும்பான்மையானவைஇந்தியாவுடன்இணைவுஒப்பந்தத்தில்கையொப்பமிட்டன. ஜீனகத், ஐதராபாத், காஷ்மீர்ஆகியவற்றின்இணைப்புமுயற்சிகள்பற்றிஅறிந்துகொள்ளவேண்டும்.

ஜீனகத் இந்தியாவுடன்இணையமறுத்து விட்டது. இதில்இந்துக்களேபெரும்பான்மையர், ஆனால்மன்னர்மொகம்மத்கான்இஸ்லாமியர்வி.பி. மேனன், இந்துக்கள்அதிகம்உள்ளஜீனகத்இந்தியாவுடன்தான்இணையவேண்டும்என்றார். குஜராத்தைச்சேர்ந்தபட்டேலின்விருப்பதெய்வமானசோமநாதரின்ஆலயம்கஜினிமுகமதுவால்முன்புஆயிரம்ஆண்டுகளுக்குமுன்புஇடிக்கப்பட்டது, அந்தகோயில்ஜீனகத்தில்இருக்கிறதுஎன்பதற்காகவேஅதைஇந்தியாவுடன்இணைக்க பட்டேல்விரும்பினார். 1942இல்ஒருகருத்துவாக்கெடுப்புநடத்தப்பட்டு, இந்தியாவுடன்இணைக்கப்பட்டது. இதன்பிறகுசோமநாதபுரம்ஆலயத்தைஅரசுப்பணத்தில்மறுகட்டுமானம்செய்து, தம்மதஉணர்வைவெளிக்காட்டிக்கொண்டார்பட்டேல்.

ஐதராபாத் இராணுவநடவடிக்கைமூலம்இணைக்கப்பட்டது. சவகர்லால்நேருஐதராபாத்விவகாரத்தைஐக்கியநாடுகள்அவையின்பாதுகாப்புகவுன்சில்மூலம்தீர்த்துக்கொள்ளலாம்எனக்கருதினார். ஐதராபாத்இணைக்கப்பட்டவிதம்குறித்து, எம்.கே. கே.நாயர்தம்The Story of an Era Told Without Ill-will என்றநூலில்குறிப்பிடுகிறார்

1948 ஏப்ரல்30, ஆங்கிலேயஅரசின்இந்தியப்படைகள்ஐதராபாத்திலிருந்துவெளியேறிவிட்டது. ஐதராபாத்தில்கடுமையானநிலைமைநிலவியது. நிசாம்பாகிஸ்தானுடன்தொடர்பில்இருந்தார். பட்டேல்இந்தியஇராணுவத்தைஅனுப்பிஐதராபாத்தைக்கைப்பற்றிக்கொள்ளவேண்டும்என்றுகருதினார். இதைஅமைச்சரவைக்கூட்டத்தில்வைத்தபோது, நேருநீங்கள்ஒருமுழுமதவெறியாளர். உங்கள்பரிந்துரையைஒருபோதும்ஏற்கமாட்டேன் (You are a total Communalist I will never accept your recommendation) என்றுஅமைதியிழந்துகூறினார். பட்டேல்அறையைவிட்டுவெளியேறினார். இதன்பிறகுஅன்றையகவர்னர்ஜெனரல்இராஜாஜி, இதுகுறித்துநடவடிக்கைகள்மேற்கொண்டார். வி.பி. மேனனிடம்இராஜாஜிபேசினார். படைகள்தயாராகஇருப்பதாகவி.பி. மேனன்கூறினார். இதன்பிறகு, நேருவையும், பட்டேலையும்இராஷ்டிரபதிபவனுக்குஅழைத்தார். இதற்கிடையில்பிரிட்டிஷ்ஹைகமிஷனரிடமிருந்துவந்தகடிதத்தைவி.பி. மேனன்இராஜாஜியிடம்அளித்தார். ஐதராபாத்தில்ரசாக்கர்கள்என்னும்நிசாம்படையினர்70 வயதுஅருட்சகோதரியரைஒருகிறித்தவகான்வென்ட்டில்பாலியல்வன்முறைக்குஆட்படுத்தியதைப்பற்றிசொல்லப்பட்டிருந்தது.

இதைப் பற்றிஇராஜாஜிகூறியதும்நேருபொறுமைஇழந்தார். இந்தியாவின்நற்புகழுக்குக்களங்கம்வந்துவிடக்கூடாதுஎன்றுகருதினார். ‘ஒருகணம்கூடதாமதிக்கக்கூடாது; அவர்களுக்குநாம்ஒருபாடம்புகட்டவேண்டும் என்றுநேருகத்தினார். இராஜாஜிவி.பி. மேனனிடம்தலைமைத்தளபதியிடம்திட்டப்படிதொடரும்படிகூறினார். இதன்படிஇந்தியப்படைகள்ஐதராபாத்துக்குள்நுழைந்தன. ஐதராபாத்விவகாரத்தில்இராஜாஜி, வி.பி. மேனன்ஆகியோரின்கருத்துஇராணுவநடவடிக்கைக்குச்சார்பாகஇருந்தது.

ஐதராபாத்தில், இதற்குமுன்பு, முஸ்லிம்கள்இந்துவெறியர்களால்படுகொலைசெய்யப்பட்டபோதுபட்டேல்கண்டுகொள்ளவில்லைபண்டிட்சுந்தர்லால்இப்படுகொலைகளைஆவணப்படுத்தியுள்ளார். முஸ்லிம்படுகொலைகளைஆவணப்படுத்தியவர்கள்மீதுபட்டேல்கடுமைகாட்டினார்(Frontline, 13 December 2013, p-20) ஐதராபாத்துக்கு மிதமிஞ்சியஇந்துஉணர்வாளர்கே.எம். முன்ஷியைஇந்தியப்பிரதிநிதியாகப்பட்டேல்அனுப்பிவைத்தார். இப்போது, இராணுவத்தைஅனுப்புவதுஎன்றுமுடிவுஎடுக்கப்பட்டதும், ஒருலெப்டினன்ட்ஜெனரல், மூன்றுமேஜர்ஜெனரல்கள், முழுகவசப்படையணிமற்றும்விமானப்படைபோலிஸ்நடவடிக்கை என்றபெயரில்அனுப்பப்பட்டது. பதவிஇழந்தஐதராபாத்நிசாமைபட்டேல்இழிவுபடுத்திப்பேசினார். ‘முஸ்லிம்களின்இரத்தத்தைநாடுகிறஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபாஆகியவர்களுடன்சேர்ந்துதிட்டமிடுகிறமுஸ்லிம் -விரோதத்தலைவராகபட்டேல்இருந்தார்.’ (மேலது)

காஷ்மீர் இணைப்புப்பிரச்சினையிலும்பட்டேல்ஒருமதவாதியாகவேஅணுகினார். காஷ்மீர்மன்னர்ஹரிசிங்ஓர்இந்துஎன்பதால்ஆர்.எஸ்.எஸ். தலைவர்கோல்வால்கரின்உதவியைபட்டேல்நாடினார். பட்டேல்எப்போதுமேஆர்.எஸ்.எஸ்மற்றும்அதன்தலைவர்களிடம்உளப்பூர்வமானஅன்பைக்காட்டிவந்தார். முஸ்லிம்களைப்படுகொலைசெய்வதுதொடர்பானஆவணத்தாள்களைதலைமைச்செயலர்ராஜேஸ்வர்தயாள்கைபற்றிவிட்டார். ஆனாலும்கோல்வால்க்கர்காவந்துசெய்யப்பட்டார்.

1947 அக்டோபரில்கோல்வால்க்கர்பட்டேல்கேட்டுக்கொண்டபடிகாஷ்மீர்மன்னர்ஹரிசிங்கைச்சந்தித்துப்பேசினார்பஞ்சாபியஇந்துக்களையும், சீக்கியர்களையும்காஷ்மீர்படைகளில்சேர்க்கும்படிகூறினார். இதன்பொருள், காஷ்மீரத்துமுஸ்லிம்களைத்தாக்குதல்நடத்திவழிக்குக்கொண்டுவருவதுஎன்பதாகும்.

காஷ்மீரில் முஸ்லிம்மக்களைஇந்துவெறியர்கள்தாக்கினர். ஆனால், இந்தியஉளவுத்துறைஅதிகாரிபி.என். முல்லிக்தமதுஅறிக்கைகளைமாற்றிஎழுதும்படிச்செய்தார்பட்டேல். (Frontline, 29 November 2013)

காஷ்மீரின் பிரச்சினைதனித்துவமானது. அதைஇந்தியாவுடன்சேர்ப்பதாஅல்லதுபாகிஸ்தானுடன்சேர்ப்பதாஎன்றுகாஷ்மீர்பிரச்சனையைக்குறுக்கிப்பாக்கமுடியாது. காந்திஇவ்வாறுகருத்துதெரிவித்திருந்தார்.

ஒரேமொழி, ஒரேகலாச்சாரம்இவர்களிடம்(காஷ்மீரிகளிடம்) இருந்துவருகிறது.  நான் பார்த்தவரையில்இவர்கள்ஒரேமக்களாகவேஇருந்துவருகிறார்கள். காஷ்மீரிஇந்துவுக்கும், காஷ்மீரிமுஸ்லீமுக்கும்இடையேஎந்தவேறுபாட்டையும்என்னால்காணமுடியவில்லை. ஜம்மு- காஷ்மீர்ஆகியவற்றின்எதிர்காலத்தைகாஷ்மீரிகளின்விருப்பமேதீர்மானிக்கவேண்டும்எனஎன்அறிவுகட்டளையிடுகிறது.’’

(மேற்கோள். காஷ்மீரின்தொடரும்துயரம், கோவை, 1999, பக்.86)

நேரு நிதானமாகமன்னரின்ஒப்புதலோடு, ஷேக்அப்துல்லாவின்ஆதரவோடுஇராணுவத்தைஅனுப்பிவைத்தார். காஷ்மீரைஅதிரடியாகக்கைப்பற்றியிருக்கவேண்டும்என்றுபட்டேலைஉயர்த்திப்பிடிக்கும்இந்துமதவாதிகள்கருத்துரைக்கின்றனர். அவ்வாறுசெய்திருந்தால், இன்றுகாஷ்மீர்பிரச்சினைஇருந்திருக்காதுஎன்பதுஇவர்கள்கருத்து. இதுமிகத்தவறானது. அவ்வாறுஒருதேசியஇனம்அடிமைகொள்ளப்பட்டால், அதுவாளாவிருக்காது.நா. உதவியுடன்கருத்துக்கணிப்பைஎப்போதோபாகிஸ்தானின்முன்முனைப்புடன்நடத்தியிருப்பர். காஷ்மீர்விடுதலைபெற்றிருக்கும்நேருவின்நயமான, வஞ்சகமானபோக்குகாஷ்மீரின்விடுதலையைஒத்திப்போட்டிருக்கிறது.

1952இல்கல்கத்தாவில்நேருஇவ்விதம்பேசினார். “காஷ்மீரில்நிகழ்வுகளைத்தீர்மானிக்கும்இடத்தில்ஜனசங்கம்அல்லதுவேறுமதவாதக்கட்சிஇருந்திருந்தால்என்னஆகியிருக்கும்என்றுகற்பனைசெய்துபாருங்கள். ஜனசங்கம்அல்லதுஆர்.எஸ்.எஸ். தங்களைநிரந்தரமாகமுற்றுகையிடுகிறநாட்டில்எதற்காகவாழவேண்டும்என்றுவேறுஎங்காவதுபோய்விடுவார்கள்; நம்முடன்இருக்கமாட்டார்கள்

(Selected Works of Jawaharlal Nehru, Vol. 17 pp.77-78; A.G.Noorani, Patel’s Communalism P.20)

ஆங்கிலேயர்கள் சேர்த்துபயிற்சிகொடுத்துவைத்திருந்தஇராணுவத்தைப்பயன்படுத்திஎல்லாபகுதிகளையும்வலுவில்பிடுங்கிஒருங்கிணைத்துவிடவேண்டும்என்றஉந்துதலும்முனைப்பும்பட்டேலிடம்மிகுந்துகிடந்தன. இதேகனவுதான்ஆர்.எஸ்.எஸ்இடமும்அகண்டபாரதம் என்றதிட்டமாகவும், காந்தியைக்கொலைசெய்தநாதுராம்கோட்சேயிடம்இந்துராஷ்டிரம் என்றபெயரிலும்இருந்துவந்தது. இன்றுநரேந்திரமோடியும், வல்லபாய்பட்டேலும், பிறஇந்துமதவாதஅமைப்புகளும்எந்தபுள்ளியில்சந்திக்கிறார்கள்என்பதுஇப்போதுபுரியும்இந்துமயமேஇந்தியம், ‘வன்முறையேவழிமுறை என்பதில்கோட்சேவுக்கும், பட்டேலுக்கும், நரேந்திரமோடிக்கும்வேறுபாடேகிடையாது.

ஆர்.எஸ்.எஸ். - பட்டேல் உறவுநிலை

பட்டேல்காங்கிரசில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அப்படியே காங்கிரசுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். அது நேருவின் கையை பலவீனப்படுத்தி, தன்னைப் பலப்படுத்திக் கொள்ள அவர் எடுத்த முயற்சியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு தன்னலக் குறிக்கோள்கள்இல்லை என்று கருத்துரைத்தார். இந்து மகா சபையினரையும் காங்கிரசில் சேர அழைத்தார். ‘இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் மட்டுமே என்று நீங்கள் கருதியிருந்தால், தவறு செய்கிறீர்கள்என்று கூறினார். ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அறிவுத் திறனைப் பயன்படுத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்என கூறிய பட்டேல், இஸ்லாமியர்களை நோக்கி, ‘நாட்டுப்பற்று அற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். இன்னமும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறவர்கள் (முடிவெடுக்காதவர்கள்) இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்என்றார். இந்தியா என்று சொல்லைவிட இந்துஸ்தானம் என்ற சொல் பட்டேலுக்கு இனிப்பானது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அடக்கி வைக்க வேண்டும் என்று கோருவோர் காங்கிரசில் இருந்தனர். பட்டேல் அவர்களுக்குக் கூறினார்.

காங்கிரசின் அதிகாரமான இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகார நிலையைப் பயன்படுத்தி ஆர். எஸ். எஸ் அமைப்பை நொறுக்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். ‘தடிஎடுத்து ஓர் அமைப்பை அடக்கிவிட முடியாது. மேலும்தடிஎன்பது திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குதான். தண்டம் எடுப்பது அதிக பலனைத்தராது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருடர்களோ கொள்ளைக்காரர்களோ அல்லர். அவர்கள் தேச பக்தர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டுமே மாறுபட்டது. காங்கிரசுக்காரர்கள்அவர்களை அன்பால் வெற்றி கொள்ள வேண்டும்

(‘For a United India’, Speeches of Sardar Patel, Publi cation Division, Govt. of India, pp.64-69; A.G.Noorani, Patel’s Communalism, p.15)

நேரு வெளிநாடு சென்றிருந்த நேரம், அவர் அருகே இல்லாததைப் பயன்படுத்தி, 1949 நவம்பர்10ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை காங்கிரசில் சேர அனுமதித்து தீர்மானம் இயற்றினார் நேரு திரும்பி வந்து, நவம்பர் 17 அன்று இத் தீர்மானத்தை இரத்து செய்தார்.

பட்டேலும்அவர் குழுவினரும் நேருவுக்கு ஒரு தொல்லையாகவே இருந்தனர். நேரு தன் அமைச்சரவையைக்கூடத் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. 1947 ஜீலை 24 அன்று காந்தி நேருவிடம் அவரது முதலாவது அமைச்சரவையில் அபுல்கலாம் ஆசாத்தை சேர்க்க வேண்டாம் என்றார். காரணம் சர்தார் பட்டேல் அதை எதிர்க்கிறார் என்றார். இந்திய விடுதலை வீரரும், அறிஞரும், சமயசார்பற்றவருமான அபுல் கலாம் ஆசாத்தின் நாட்டுப் பற்றைப் பொய்யானது என்று லக்னோவில் பேசினார்.

காந்தி கொலையும், பட்டேலின் போக்கும்

1948 சனவரி 30ஆம் நாள் காந்தி டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் அங்கேயே வழிபாட்டுக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போது மாலை 5.12 மணிக்கு நாதுராம் விநாயக் கோட்சே என்ற சித்பவன் பிராமண இந்து வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாலை 4 மணிக்கு வந்திருந்த பட்டேலுடன் ஒரு மணி நேரமாக நேருவும் பட்டேலும் ஒத்துப்போக வேண்டியதன் அவசியம் குறித்து வாதாடிக் கொண்டிருந்தார்.

இடம் பெயர்ந்து அல்லல்படும் இஸ்லாமியர் அவரவர் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், மசூதிகளில் குடியேறிய இந்துக்கள் வெளியேற வேண்டும் என்றும், மதக்கலவரம் நிற்க வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய 55 கோடியை நேருவும், பட்டேலும் கொடுத்து விட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து சமூகத்தினரும் கலவரத்தை நிறுத்திக் கொள்ள உறுதி கொடுத்தால் மட்டுமே உண்ணா நிலையைக் கைவிட முடியும் என்று கூறி மேற்கொண்ட அவரது உண் ணாநிலை சனவரி 18ஆம் தேதி முடி வுக்கு வந்தது. கலவரமும் நின்றிருந்தது.

பட்டேல்காந்தியின் உண்ணாநிலை தன்னை எதிர்த்தே நடப்பதாகக் கருதினார். காந்தியாரிடம் பட்டேல் கொண்ட முரண்பாடு இயல்பானது. மதவாத பட்டேலால் காந்தியின் சமய சம உணர்வைச் சகிக்க முடியவில்லை. கலவரம் குறித்து காந்திக்குக் கிடைக்கும் தகவல்கள் தவறானவை என்றார்; முஸ்லிம்கள் குறை கூறவோ பயப்படவோ தேவை இல்லை என்றார்.

பட்டப்பகலில் டெல்லியில் முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டு வந்த அந்தக் காலத்தில் ஜவகர்லாலின் குற்றச்சாட்டுகள் அடியோடு புரிந்து கொள்ள முடியாத வையாக இருக்கின்றன என்று அவர் (பட்டேல்) அமைதியாக காந்தியிடம் தெரிவித்தார்”.

(மௌலானா அபுல்கலாம் ஆசாத், ‘இந்திய விடுதலை வெற்றி’ (India Wins Freedom), அடையாளம், 2010, பக்.278)

சர்தார்படேலின் உளநிலை காந்திக்கு உறுத்தலைத் தந்தது. காந்தியின் கடைசி (15ஆவது) உண்ணாநிலை தொடங்கியபோது, பட்டேல் காரணமில்லாமல் உண்ணாநோன்பைக் காந்தி மேற்கொண்டுள்ளதாகக் குறை கூறினார். அதற்கு பதிலாகக் காந்திஎன் கண்களையும் காதுகளையும் நான் இன்னும் இழந்து விடவில்லை.’ என்று பதில் கூறினார். (மேலது, பக்.281)

தன் உண்ணாநிலை கலவரக்காரர்கள் கண்ணைத் திறந்து விடும் என்று காந்தி கூறியதும் சர்தார் பட்டேல் காந்தியிடம் கடுமையாகப் பேசினார்; அவர் குரலை உயர்த்திப் பேசியதை ஆசாத் தம் நூலில் பதிவு செய்கிறார். (மேலது, பக்.282). பட்டேல் பம்பாய்க்குப் புறப்படு வதாகக் கூறிவிட்டு, “எனக்கு செவி சாய்க்க காந்திஜி தயாராக இல்லை, உலகத்தின் முன் இந்துக்கள் முகத்தில் கரிபூச அவர் உறுதி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.’’ (மேலது.)

பட்டேல்புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனால் காந்தியின் உண்ணாநிலை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அகண்ட பாரதம், ஆரிய மேலாண்மை, வருணாசிரமப் பாதுகாப்பு, சித்பவன் பார்ப்பன அரசியல் தலைமை ஆகியவற்றையெல்லாம் கொண்ட இந்து ராஷ்டிரத்தைத்தங்கள் இலக்காகக் கொண்ட இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காந்தியை கொலை செய்துவிட ஆலாய்ப் பறந்தனர்.

காந்தியாரைக் கொலை செய்ய ஐந்து முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கிய ஐவருள் ஒருவரான வி.டி. சாவர்க்கரின் வாழ்த்துக்களைப் பெற்று நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, மதன்லால் பாவா, திகம்பர் பாட்கே, கோபால் கோட்சே, கார்கரே போன்றோர் டில்லி வந்திருந்தனர்.

நான்காவதுமுயற்சியாகக் காந்தியைக் கொல்ல மதன்லால் பாவா மேற்கொண்ட முயற்சி (20 சனவரி 1948) தோல்வியுற்றது. மதன்லாலை ஒரு கிழவி பிடித்துக் கொடுத்தாள். இதன்பிறகு வி.டி. சாவர்க்கர் மீது சந்தேகம் விழுந்தது.

பிற்காலத்தில் 1965 மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே. கபூர் விசாரணை குழு, ‘அனைத்து உண்மைகளையும் சேர்த்துப் பார்த்தால் சாவர்க்கரும் அவருடைய குழுவினருமே காந்தியைக் கொலை செய்ததாகத் தெரிகிறதுஎன்று உறுதிபடத் தெரிவித்தது.

சனவரி20ஆம் தேதி, மதன் லால் பாவாவின் வெடிகுண்டு வீச்சு தோல்வியடைந்தது. அவன் காவல்துறையிடம் தான் சாவர்க்கரை சந்தித்து விட்டு வந்ததையும், தன்னுடன் வந்த கோட்சே அடையாளத்தை வெளியிட்டு விட்டான். இடத்தை விட்டுத் தப்பியோடிய நாதுராம் வினாயக் கோட்சே பூனாவிலிருந்து வெளியாகும் மராத்தி இதழ்இந்து ராஷ்டிராவின் ஆசிரியர் என்றும் தப்பியோடிய நாராயண் ஆப்தே அவ்விதழின் உரிமையாளர் என்றும் காவல் துறைக்குத் தெரிந்து விட்டது.

கொலைகாரர்கள் குழுவில் ஏழு பேர் என்பதையும், தனது சகாக்களுடன் சாவர்க்கர் சதனில் இருந்ததையும் தெரிவித்தான்.

மே மாதத்திலிருந்து காவல்துறை கண்காணிப்பில் இருந்து வரும் வீரசாவர்க்கரின் ஆதரவாளர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்என்பதும் தெரிந்துள்ளது. அன்றிரவே சதிகாரர்கள் பற்றிய அடையாளங்கள் அறியப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய டில்லியில் இருந்த சாதாரண காவலருக்குக் கூட வெகுநேரம் பிடித்திருக்காது ஆனால், நன்றாகத் தொடங்கப்பட்ட இந்த விசாரணை பின்னர் முறையாகத் தொடரப் படாமலும்,தீவிரமிழந்தும் போனது”.

(டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ், நள்ளிரவில் சுதந்திரம், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1997, பக்கம்.563)

டில்லி காவல்துறை மெத்தனமாக இருந்தது. சதிகாரர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள். பம்பாய் போலீஸ் உதவி கமிஷனர் ஜம்ஷித் நாகர்வாலாவிடம் பம்பாய் உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் சதிகாரர்களைக் கண்டுபிடிக்கும் வேலையை ஒப்படைத்தார். அவர் முஸ்லிமும் இந்துவும் அல்லாதவர், ஒரு பார்சி; மிகத் திறமையான அதிகாரி. நாகர்வாலா என்ற பம்பாய் காவல்துறைத் துணை கமிஷனர் குற்ற அறிக்கை 1 இல்சாவர்க்கரே இச்சதியின் பின்னணி என்பதைத் தெளிவு படுத்தியது. காந்தி 30 சனவரி 1948 அன்று கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாள், (31 சனவரி 1948) நாகர் வாலா அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கொலையாளிகளான கோட்சேயும், நாராயண் ஆப்தேயும் டில்லிக்குப் புறப்பட்டு வருதற்கு முன்பு சாவர்க்கரை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினர் என்று தெரிவித்திருந்தார். இது சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் காசர் மற்றும் செயலர் தம்ளே ஆகியோர் அளித்த தகவல் ஆகும். இதற்கு முன்பே சனவரி 14 மற்றும்17 தேதிகளில் சதிகாரர்கள் சாவர்க்கரை சந்தித்திருந்தனர். சாவர்க்கரின் பணியாளர்கள் குறிப்பிட்டது கொலைப் பணிக்குப் புறப்படும் போது சந்தித்த நிகழ்ச்சி பற்றியது.’

காந்தி கொலை வழக்கில் தலைமை வழக்குரைஞராகத் தோன்றி வழக்கு நடத்தியவர் சர்தார் வல்லபாய் பட்டேல், அன்றைய துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆவார். காந்தியின் படுகொலைக்கு மறுநாளே நாகர் வலா கண்டுபிடித்த முக்கியத் தகவல்கள் நீதிமன்றத்தில் பேசப்படவில்லை. சாவர்க்கரின் பணியாளர்கள் சாட்சிகளாக இறுதிவரை நிறுத்தப்படவே இல்லை, சாவர்க்கர் தண்டனையிலிருந்து தப்பினார்.

உள்துறைஅமைச்சர் என்ற முறையில், காந்தியாரின் படுகொலை பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டிய வேலைகளை முடுக்கிவிடும் பொறுப்பு பட்டேலுடையது. நேருவுக்கு பட்டேல் 27 பிப்ரவரி 1948இல் எழுதிய கடிதத்தில் காந்தியின் படுகொலை பற்றிய விசாரணையின் முன்னேற்றம் குறித்து தினந்தோறும் தொடர்பில் இருப்பதாகவும், இதை நடத்தியவர்கள் சாவர்க்கரின் கீழ் உள்ள இந்து மகா சபையின் ஒரு பிரிவினர்தான் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காந்தி கொலையில் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டி ருந்தார்.

1948 செப்டம்பர் 9 அன்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ். எஸ்) அமைப்பின் தலைவர் குருஜி கோல்வால்கருக்கு பட்டேல் எழு திய கடிதத்தில்ஆர்.எஸ்.எஸ். பரப் பிய வகுப்பு வாத நஞ்சினால்தான் காந்தியை இழக்க வேண்டி வந்ததுஎன்று எழுதினார். ஆனால், அதே கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது தேசப்பற்று செயல்பாடுகளை காங்கிரஸ் சேர்வதன் மூலமே செய்ய முடியும் என்று அழைப்பு விடுத்தார். பட்டேலின் பார்வை யில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தேசப்பற்றாளர் அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய குருஜி கோல் வால்க்கர் 1948 நவம்பர் 13 அன்று கைது செய் யப்பட்டார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப அவருடைய ஆதரவாளர்களும் அமைப்பினரும் டிசம்பர் 9ஆம் தேதி பல இடங்களில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இப்பிரச்சினைக்கு வல்லபாய் பட்டேல் ஒரு வழியைக் கூறினார். ஆர். எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு அமைப்பு வரைவைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும்படிக் கூறினார். இதைப் பெற்றுக் கொண்டு (சூன் 1949) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடையை பட்டேல் நீக்கினார். (12 சூலை 1949) மறுநாள்குருஜி கோல்வால்க்கரும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். மீது கட்டாயத்தின் பேரிலேயே பட்டேல் தடை விதிக்க நேர்ந்தது. 1949 ஜீலை 12இல் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டது. பட்டேல் குருஜி கோல் வால்கருக்குக் கடிதம் எழுதினார். அதில். ‘எனக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பது”  என்று எழுதி னார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாதுகாக்கிற வேலையை சர்தார் பட்டேல் செய்தார். ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகாசபை முழுவதும் பாதிக்கப்பட்டு விடாமல், அகப்பட்டுக் கொண்ட அந்த சிலரோடு பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. 1948 பிப்ரவரி27இல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், பட்டேல்பாபு (காந்தி)வின் கொலைச் சதி பலரும் பொதுவாகக் கருதுகிறபடி விரிவான ஒன்று அல்ல. ஜின்னாவும் பேச்சுவார்த்தைக்குக்காந்தி போனதிலிருந்து அவருக்கு விரோதமாகப் போன சில மனிதர்களோடு மட்டுமே குறுகிப் போன ஒன்று’. காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் மகாசபைக்காரர்கள் வரவேற்றார்கள் என்பது உண்மை. நமக்கு முன் உள்ள சான்றுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகாசபையின் வேறு எந்த உறுப்பினரையும் தண்டிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன்என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ் செய்தது அல்ல என்பதே கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட செய்தி.

ஆர்.எஸ்.எஸ்க்கும் சாவர்க்கருக்கும், கோட்சேக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடியாத ஒன்று. ஆர்.எஸ்.எஸ்ஸை உருவாக்கிய ஐந்து தலைவர்களுள் சாவர்க்கர் ஒருவர். கோட்சே அவருக்குக் கிடைத்த மிகச்சிறந்த சீடர். காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலேயே வளர்ந்தவன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என் பதை உறுதிப்படுத்தினார்.

நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்தோம் நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் எல்லோரும் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.இல் வளர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். ஆர். எஸ். எஸ்.தான் எங்கள் குடும் பம். நாதுராம் அதில் பவுத்திக் காரிய வாஹ் ஆக (Intellectual Worker) பணியாற்றினார்.

தன் வாக்குமூலத்தில் நாதுராம் தான் ஆர்.எஸ்.எஸ். விட்டு வெளியேறியதாகச் சொன்னார். காரணம், கோல்வால்கரும் ஆர். எஸ்.எஸ்சும் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது தான். ஆனால் நாதுராம் ஆர்.எஸ். எஸ். விட்டுப் போகவில்லை.’’ (www.sscnet.ucla.edu/southasia/History/Hindu_Rashtra/nathuram.html) நாதுராம் கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று காந்தி கொலை வழக்கை முடித்தார்கள். சர்வர்க்கருக்கும் தொடர்பில்லை என்று கூறி அவரையும் காப்பாற்றினார்கள். பட்டேலைத் தவிர வேறு எவராவது உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் சாவர்க்கர் தப்பியிருக்க முடியாது. ஆனால், கொலைச் சதியிலிருந்து காந்தி தப்பித்திருப்பார். காந்தி சில வாரங்களில் கொல்லப்படுவார் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும், தகவல் உரிய காலத்தில் கிடைத்திருந்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை? காந்தியை ஏன் காப்பாற்ற முடியவில்லை?

நரேந்திரமோடி கோரும் மத சார்பின்மை வல்லபாய் பட்டேலிடம் இருந்தது. அது முஸ்லிம்கள் விரட்டப்படுவதை, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுவதை ஏற்றுக் கொண்டது. 2002இல் இஸ்லாமியர்களைக் குஜராத்தில் படுகொலை செய்த நரேந்திரமோடி தனக்கு முன் மாதிரியாக சர்தார் பட்டேலைக் கொள்வதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது.





Post a Comment

0 Comments